சென்னை, செப்.27- சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள் முருகன் ஆகியோர் கடந்த 2023ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவ ரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவரும் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, இவர்கள் இருவருக்கும் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். சிறீவஸ்தவா நிரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி உறுதிமொழி ஏற்று இருவரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்..
‘ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே’
என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, செப்.27- சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் (25.9.2025) ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா மேடையில், ‘நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று தனது முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் வழங்கிய பிரேமா பேசுகையில், தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் ஊதியத்தை தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் எதிரொலி
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும்
42 சதவீத இடஒதுக்கீடு வழங்க தெலங்கானா அரசு உத்தரவு
42 சதவீத இடஒதுக்கீடு வழங்க தெலங்கானா அரசு உத்தரவு
புதுடில்லி, செப்.27- தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் BC-க்கு (பிற்படுத்தப்பட்டோர்) 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறை
வேற்றியது.
இந்த மசோதாக்கல் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போராட்டம் நடத்தினா். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, இது ஓபிசி-க்கு எதிரான மசோதா என குற்றம்சாட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக BC-க்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. முன்னதாக 23 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.