சென்னை, செப்.27 ‘திராவிட மாடல்’ அரசு அறிவித்த இந்தி யாவின் முதல் கடற்பசுப் பாது காப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெருமிதம் தெரிவித் துள்ளார்.
அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதானகடற்பசு இனத்தையும்,அதன் கடல் வாழ்விட ங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் கடற்பசுப் பாதுகாப்பகம் அமைக் கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறி வித்தார்.
அதன்படி, 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட் டங்களின் கடலோரப்பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடற்பசுப் பாதுகாப்பகம் அமைக் கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதன்முறை யாக தமிழ்நாட்டில்தான் கடற்பசுப் பாதுகாப்பகம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட் டுள்ள சமூகவலைதளப் பதிவில், திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த முன்னோடிமுயற்சியைப் பாராட்டும் தீர்மானம் அபுதாபி IUCN World Conservation Congress முன் இணைய வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை, ஓம்கார் நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.