வல்லம், செப்.27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தந்தை பெரியாரின் 147ஆம் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கழிவிலிருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் 12.09.2025 முதல் 16.09.2025 வரை பாலிடெக்னிக் வளாகத்தி;ல் நடத்தப்பட்டன.
மரக்கன்றுகள் நடவு
17.09.2025 அன்று காலை இக்கல்லூரி வளாகத்தில் நாட்டுநலப் பணித் திட்டத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
கருத்தரங்கம்
17.09.2025 அன்று மாலை 3.00 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி தனது தலைமை உரையில் தந்தை பெரியாரின் சமூக சேவையையும், தொண்டறத்தையும் விளக்கமாக எடுத்துரைத் தார். துணை முதல்வர் முனைவர் க.ரோஜா “பெரியாரின் தலைமையில் வைக்கம் போராட்டம் வெற்றி” என்ற தலைப்பில் பல வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இக்கல்லூரியின் முதன் மையர் ஜீ.இராஜாராமன் உரையில் “பெரியாரின் சுயமரியாதை” என்ற தலைப்பிலும், ஆங்கில விரிவுரையாளர் ஆர்.அய்யநாதன் “மூடநம்பிக்கை ஒழிப்பு” என்ற தலைப் பிலும் செயற்கை நுண்ணறிவு & இயந்திர கற்றல் துறைத்தலைவர் எம்.சண்முகப்பிரியா “பெரி யாரும் பெண்ணுரிமையும்” என்ற தலைப்பிலும் பல கருத்துகளை எடுத்துரைத்தனர். மூன் றாமாண்டு கணினியியல் மாணவர் கவின் வரவேற்புரையாற்றினார். இரண்டாமாண்டு கணினி யியல் மாணவி பஸ்ரினா சகரின் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவு பெற்றது.
இரத்தக் கொடை முகாம்
19.09.2025 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கின் நாட்டு நலப்பணித்திட்டமும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை யின் இரத்த வங்கியும் இணைந்து நடத்திய இரத்தக் கொடை முகாமை இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்து இரத்த தானம் செய்தார். மேலும் மாணவ, மாணவிகள் இரத்த கொடை அளித்தனர். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் இரத்தக் கொடை முகாமை ஒருங்கிணைத்தனர்.
தொழில்நுட்பக் கருத்தரங்கு
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் தொழில்நுட்பக் கருத்தரங்கு தேசிய அளவில் பெரியார் பாலிடெக்னிக்கில் 04.09.2025 அன்று நடைபெற்றது. இதில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து பங்கேற்று கட்டுரைகள் வாசித்தளித்தனர். கட்டுரை வாசித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகளும் ,சான்றிதழ் களும் வழங்கப் பட்டன.
சமூக நீதி நாள் உறுதிமொழி
17.09.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாணவர்களும், பேராசிரியர்களும் பெரியார் பிறந்த நாளன்று “சமூக நீதி நாள்” உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.