1986-இல் மத்திய பிரதேசத்தில் மின் வாரியத்தின் கட்டன வசூலிப்பாளர் ஜகேஷ்வர் ரூ.100 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004-இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க, விசாரணையில் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உறுதியாகாததால், 38 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த செப். 9-ஆம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவரின் வாழ்க்கை ஓடி விட்டது. தாமதமான நீதி எவ்வளவு கொடுமையானது!
வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.67,000 கோடி
வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.67,000 கோடி வைப்பு நிதியை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க ஆர்.பி.அய். (RBI) அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் இது தொடர்பான விழிப்புணர்வை பயனாளர்களுக்கு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால், அவை உரிமைக் கோரப்படாத வைப்புத் தொகை என வகைப்படுத்தப்படும்.