பத்திரிக்கை நடத்துறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. மாத பத்திரிக்கைகள், மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் நடத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால் தினசரி பத்திரிக்கை நடத்துவது சும்மா லேசான விஷயம் இல்லை.. அதுலயும் ஒரு குழுவின் கேப்டனாக இருந்து கொண்டு பத்திரிக்கை நடத்துவது மிகப்பெரிய சவால். அத்தகைய சவாலான பொறுப்பை பதிப்பு ஆசிரியராக விடுதலை பத்திரிக்கைக்கு 1962 முதல் இன்று வரை திறம்பட நடத்தி வரும் அய்யா கி.வீரமணி அவர்களின் ஓய்வறியா பணி ஆச்சரியம் மட்டுமல்ல அசாதாரணமும் கூட.. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கூட இவ்வளவு நீண்ட நெடிய காலம் ஒரு நாட் அவுட் பேட்ஸ்மேனாக தானே களமாடி வரும் தலைவராக இருந்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி மட்டுமே என்று இந்து நாளிதழின் பிரபல துணை வெளியீடான பிரண்ட்லைன் ஆசிரியர் திரு விஜய் சங்கர் வெகுவாக பாராட்டி பேசினார். ஆசிரியர் அவர்கள் தனது அயராத பணிக்காக கின்னஸ் சாதனை விருது பெறவும் தகுதி உடையவரே என்று அருமையாக பேசிய உரையை பெரியார் காணொலி வலைதளமான Periyar Vision OTT இல் இன்றே கண்டு மகிழுங்கள்.
– டி. பத்மநாபன்
சமய நல்லூர்