சென்னை, செப்.26- விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பன் தலைமையில் விழுப்புரம் நகர்மன்ற மேனாள் துணை தலைவர் பார்த்திபன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தணிகாசலம், கோலியனூர் ஒன்றிய மேனாள் செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி கிளாரா உள்ளிட்டோரும், சீர்காழி நகர அ.தி.மு.க. செயலாளர் பாலமுருகன் தலைமையில் நகர துணை செயலாளர் பரணிதரன், சீர்காழி நகர் மன்ற உறுப்பினர் வெற்றி செல்வன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர். அதேபோன்று பா.ம.க.வைச் சேர்ந்த மேனாள் மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் முனுசாமி, விழுப்புரம் மேற்கு நகர செயலாளர் சையத் முபாரக் உள்ளிட்டோர் பா.ம.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.