நாகை, மே 25- நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் முப்பெரும் விழா 21.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை வேதாரண்யம், தமிழ்த் தென்றல் வளாகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, “பாவேந்தர் பேருரையாளர் – விருது” வழங்கும் விழா, பெரியார் 1000 சிறப்பிடம் பெற்ற மாண வர்களுக்குப் பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் புயல் சு. குமார் தலைமை வகித்தார். பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் மு. க. ஜீவா வரவேற் புரையாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர்கள் கி. முரு கையன், சு.கிருட்டிணமூர்த்தி, கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.நெப்போலியன், கழக மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இல. மேகநாதன் தொடக்கவுரை ஆற்றினார்.
வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் மா. மீ. புகழேந்தி விழாவில் கலந்து கொண்டு வேதாரண்யம் பஞ்சநதிக் குளம் கிழக்கு பெரும்புலவர் பெரியார் கொள்கையாளர்
சீ.கனகசுந்தரனாருக்கு “பாவேந்தர் பேருரையாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கிப் பாராட்டி னார்.
பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச் செல்வன் “பெரியார் 1000” போட்டித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில ஆசிரியர் அணி தலை வர் வ. தமிழ்பிரபாகரன், மாநில அமைப்பாளர் இரா. சிவக்குமார் ஆகியோர் நாகை மாவட்ட அளவில் +2 தேர்வில் முதலிடம் பெற்ற கடினல்வயல் அ. மே. நி. பள்ளி மாணவி வே. நிவேதிதா பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.
வேதாரண்யம் ஆர்.எஸ்.மணி நிறுவனங்களின் தொழிலதிபர் அரிமா அருண் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நாகை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி அ.லட்சுதாவிற்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் வேதாரண்யம் நேதாஜி மருத்துவமனை தலைவர் பெரியார் கொள்கையாளர் டாக்டர் வி.ஜி.சுப்பிர மணியன், நாகை சாதிக், தொழிலதிபர் அம்பாள் குண சேகரன் பொறுப்பாளர்கள் இரா. முத்துகிருட்டிணன், வை.பா. பார்த்தசாரதி, சி. தங்கையன் ஆ.பா. தர்மதுரை, ப. சுப்பையன், சட்டக் கல்லூரி மாணவி இரா. அகிலா, கலைக் கல்லூரி மாணவி அ. கார்த்திகா பேசினர், பாடகர்கள் கோவி. இராசேந்திரன், பிரேம்தாஸ் புரட்சிக் கவிஞர் பாடல்களை பாடினர்.
திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக் குரைஞர் மதிவதனி “எந்நாளோ?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் அ. சிவராமன் நன்றி கூறினார்.