தஞ்சாவூர், செப். 26- பள்ளிக்கல்வித் துறை சார்பில் 23.9.2025 அன்று நடத்திய மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவில் மொத்தம் 31 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 4 மாணவர்களும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 4 மாண வர்களும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 2 மாணவர்களும் மொத்தம் 10 மாணவர்கள் முதல் பரிசு பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளனர்.
இரண்டாவது பரிசு 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 4 மாணவர்களும் 17 வயதுக்குட் பட்ட பிரிவில் 3 மாணவர்களும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 4 மாணவர் களும் மொத்தம் 11 பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர் . மூன்றாவது பரிசு 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 2 மாணவர்களும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 2 மாணவர்களும் மொத்தம் 5 பரிசுகள் பெற்றுள்ளனர்.
நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு என மொத்தம் 26 பரிசுகள் பெற்று மிகப்பெரிய அளவில் சாதனை மாணவர்களும். பரிசு பெறுவதற்கு கடினமாக உழைத்த பள்ளி சிலம்பம் ஆசிரியர் பிரியதர்ஷனையும், உடற்கல்வி ஆசிரியை நித்யாவையும், பரிசுகள் பெற்ற மாணவ மாணவிகளையும் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர் பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மனமுவந்து பாராட்டினர்.