தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக உலகின் தலைசிறந்த ஆய்வாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் பாலகுமார் பிச்சை

வல்லம், செப். 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்  (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வு இதழ்கள் வெளியீட்டுப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் பாலகுமார் பிச்சை தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக (2020, 2021, 2022, 2023, 2024,2025) 2 சதவிகிதம் உலகின் சிறந்த ஆய்வாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக் கழகம் அறிவியல் ஆய்விதழ்களை வெளியிடும் எல்செவியருடன் இணைந்து 19.09.2025 அன்று 2025 ஆம் ஆண்டிற்கான உல கின் சிறந்த விஞ்ஞானிகளின் ஸ்டான்ஃபோர்ட்-எல்செவியர் முதன்மை ஆய்வாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பேராசிரியர் பாலகுமார் பிச்சை உலகின் சிறந்த அறிவியல் ஆய்வாளர்-2025 பட்டியலில் தொடர்ந்து 6 ஆவது  ஆண்டாக மருந்தியல் மற்றும் மருந்தகவியல் துறையின் கீழ் 2020, 2021, 2022, 2023, 2024, 2025 ஆண்டுகள் இடம்பெற்றுள்ளார்.

உலகின் தரம் மிக்க…

பேராசிரியர் பாலகுமார் பிச்சை இதய இரத்த நாளம், நீரிழிவு மற்றும் சிறுநீரக மருந்தியல் மற்றும் நச்சியல் ஆராய்ச்சி முறையியல் மற்றும் உலகின் தரம் மிக்க அறிவியல் ஆய்வு இதழ்களில் பங்களிப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 135 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 24, 2025 நிலவரப்படி, இவர் 6661 அறிவியல் ஆய்வுக் மேற்கோள்கள் (Citations)  மற்றும் h-index (45 H குறியீடு) பெற்றுள்ளார். இது உலக ஆராய்ச்சியாளர்களிடையே இவரது அறிவியல் மற்றும்  ஆராய்ச்சி கட்டுரைகளின் ஆய்வு தாக்கங்களை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவில்…

பேராசிரியர் பாலகுமார் பிச்சை பஞ்சாபி பல்கலைக்கழகம் – பட்டியாலா, பஞ்சாபில் இதய இரத்த நாள மருந்தியலில் சிறப்புப் பயிற்சியுடன் மருந்தியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் 2007 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

டாக்டர் பாலகுமார் பிச்சை தற்போது பெரியார் மணியம்மை (நிகர்நிலைப் பல்கலைக்ழகம்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் இயக்குநராக உள்ளார். முன்னதாக டாக்டர் பாலகுமார் சவுதி அரேபியாவின் கிங் காவித் பல்கலைக்கழகத்தின் மருந்தகவியல் கல்லூரியில் மருந்தியல் பேராசிரியராகவும், மலேசியாவின் AIMST பல் கலைக்கழகத்தின் மருந்தகவியல் பிரிவின் மூத்த இணைப் பேராசிரி யர் மற்றும் மருந்தியல் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார்.

அய்ரோப்பா (இத்தாலி) அடிப்படையிலான எல்செவியர் இதழான பார்மகாலஜிக்கல்  ஆராய்ச்சி ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார். புகழ்பெற்ற நேச்சர் அறிவியல் ஆய்விதழ் பேராசிரியர் பால குமாரின் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இவர் இதயம் மற்றும் சிறுநீரக அறிவியல் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.

பன்னாட்டளவில்…

பன்னாட்டளவில் புகழ்பெற்ற Wos-SCIE இதழ்களில் இவர் பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.  இதற்காக சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த ஆய்வாளர் விருதுகள் பல பெற்றுள்ளார்.   பேராசிரியர் பால குமார் பிச்சை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருந்தியல், மருத்துவம், உயிர்மருத்துவம் பொறியியல், அறிவியல், கணினி அறிவியல், மேலாண்மை, கட்டடக்கலை, கலை மற்றும் மொழிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களோடு இணைந்து மாணவர்களுக்கு பல பயிலரங்குகள் மற்றும் வகுப்பு களை நடத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *