01.07.1944 – குடிஅரசிலிருந்து…
3.6.44 இரவு பூவாளூர் சிவன் கோவில் எட்டாந் திருவிழா சாமி புறப்பாட்டுடன் வந்த வேத பாராயண பார்ப்பனரை, தமிழில் சொல்லும்படி தோழர் நல்லதம்பி கேட்டார். பாராயணக்காரர்கள் மறுத்தனர். திராவிடர் தெருவில் தமிழில் தான் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தவே பாராயணக்காரர்கள் கலைந்து போய் விட்டனர். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சாமியை ரோட்டிலேயே இறக்கி வைத்து பந்தம், பெட்ரோமாக்ஸ் விளக்குகளை அணைத்துவிட்டு, வேத பாராயண மறுப்பாளர் மீது குற்றம் சாட்ட சூழ்ச்சி செய்தனர். பின் டிரஸ்டியும், கி.முவும், மற்றும் சிலரும் சமாதானம் செய்ய வந்தனர். மறுப்பாளர் இணங்காமற் போகவே, காலை 5 மணியளவில் சாமியைத் தூக்கிச் சென்றனர். பந்தோபஸ்துக்கு வந்திருந்த போலிசார் தோழர்கள் நல்லதம்பி, ஆர்.ரெங்கன், சி.ராமலிங்கம், சி.ரெங்கராசன், வி.ரெத்தினம், ஏ.சீனிவாசன் ஆகியவர்கள் பெயரை எழுதிக்கொண்டு போனதுடன், கி.மு.வும். மேற்படி அறுவர் மீதும் போலிசுக்குப் பிராது செய்ததாகத் தெரிகிறது.