‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் (ரெட்டி) உரையில் உறுதி!

4 Min Read

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கிடைத்ததற்குத் தமிழ்நாட்டு மக்கள் பெருமைப்பட வேண்டும்!
தமிழ்நாட்டில் இருப்பதை போலவே 69 சதவீத
இட ஒதுக்கீட்டை தெலங்கானாவில் அமல்படுத்தப் போகிறேன்!
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் (ரெட்டி) உரையில் உறுதி!

சென்னை, செப்.26–  “முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கிடைத்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பெருமைப் பட வேண்டும்” என்றும், “தமிழ்நாட்டில் இருப்பதை போலவே 69 சதவீத இட ஒதுக்கீட்டை தெலங்கானாவிலும் அமல்படுத்தப் போகிறேன்” என்றும் சென்னையில் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் (ரெட்டி) உரை யாற்றுகையில் குறிப்பிட்டார்.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் (ரெட்டி) ஆற்றிய உரை வருமாறு:–

தமிழ்நாட்டில் இளைஞர்கள் கல்விலும், விளையாட்டிலும் சிறப்பாக உள்ளனர். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கைகளை முன்படுத்தி, செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு மற்றும் தெலங்கானா இரண்டு மாநி லங்களும் ஒரே மாதிரியான சமூகநீதிக் கொள்கைகளை கொண்டவை.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல் வாய்ப்புப் பெற்றவர்கள் ஆவர்; இதுபோன்ற முதலமைச்சர் கிடைப்ப தற்கு. முத்தமிழறிஞர் கலைஞரின் சமூக நீதிக் கொள்கை தெலங்கானாவை மிகவும் ஈர்த்துள்ளது.

நாங்களும் செயல்படுத்தப் போகிறோம்!

“தமிழ்நாடு கல்வியிலும், விளை யாட்டிலும் மிகச் சிறந்து விளங்குகிறது. காலை உணவுத் திட்டம் ஈடு இணையற்ற திட்டம். ஏழை எளிய மக்களின் நலனுக்காக இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இதைப் பார்த்ததும் நான் ஒரு முடிவு செய்து விட்டேன். தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதலாக காலை உணவுத்  திட்டத்தை நாங்களும் செயல்படுத்தப் போகிறோம். எனது இனிய நண்பரான மு.க.ஸ்டாலினிடம் இருந்து இந்தத் திட்டத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்”.

காலை உணவுத் திட்டம் என்பது இதயத்தைத் தொடும் திட்டமாகும். தெலங்கானா அரசு இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளது. ‘புதுமைப் பெண்’ திட்டம், ‘நான் முதல்வன்’ திட்டம், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களால் தமிழர்கள் அனைவரும் நல்ல பயன்களை அடைகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்!

தமிழர்கள் மற்றும் தெலுங்கு மக்கள் இடையே வரலாற்று நட்பு உள்ளது. எனது தெலங்கானாவில் கல்விக்குத்தான் முன்னுரிமை, கல்வித்துறைக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

“நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம்” போன்ற சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மனதார பாராட்டுகிறேன். தமிழ் மக்களாகிய நீங்கள், இப்படியொரு சிறந்த முதலமைச்சர் கிடைத்ததற்காக பெரு மைப்பட வேண்டும். தமிழ்நாட்டின் மாடல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே உதாரணமாக உள்ளது.

தெலங்கானாவில்
69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப் போகிறேன்!

தமிழ்நாடும், தெலங்கானாவும் ஒரே மாதிரியான கலாச்சாரங்களை கொண்டுள்ளன. சமூகநீதியும் தெலங்கானாவிலும், தமிழ்நாட்டிலும் பொதுவானதாக உள்ளது. சமூக நீதியில் எங்களுக்கு முன்னுதாரணம் யார் தெரியுமா? கலைஞர் அவர்கள்தான்.

மற்றொரு அறிவிப்பையும் நான் இங்கு அறிவிக்கிறேன். தமிழ்நாட்டில் இருப்பதை போலவே 69 சதவீத இட ஒதுக்கீட்டை தெலங்கானாவிலும் அமல்படுத்தப் போகிறேன்.

கல்வி மட்டுமல்ல, விளையாட்டி லும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு் உள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நூற்றாண்டு கால நட்பு கொண்டவர்கள். தமிழ்நாடு அரசுமூலம் பட்டதாரிகளுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படுகிறது. அதே போல, தெலங்கானாவிலும் இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.

தெலங்கானாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்க வில்லை. இந்தியா ஸ்கில்ஸ் யூனிவர் சிட்டி என்பதை ஏற்படுத்தி மாணவர்கள் திறனை மேம்படுத்தி வருகிறேன்.

தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட
தெலங்கானா அரசு தயார்!

பழைய தொழில்பயிற்சி மூலம் எந்தப் பயனும் இல்லை. டாட்டா நிறுவனத்திடம் சேர்ந்து நவீன தொழில் பயிற்சி தெலங்கானா மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு போலவே உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தெலங்கானாவிலும், அய்தராபாத்திலும் பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் செயல்படும் அளவிற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இரண்டு மாநிலங்களும் இணைந்து உயர்ந்த கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டும்.

தமிழ்நாட்டை பின்பற்றி, விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு வீரர்களை எங்கள் மாநிலத்துக்கு பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.

78 ஆண்டுகள் ஆகியும் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் வெல்ல முடியவில்லையென்றால் என்ன பயன்? ஆகவே விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன்.

2028 இல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு இரண்டு மாநிலங்களும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்த கல்வியை ஏழை, எளிய மாணவர்களுக்கு அளிக்கவேண்டும். அவர்களின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட தெலங்கானா அரசு தயாராக உள்ளது”.

இவ்வாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் (ரெட்டி) உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *