குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவும்
வைரஸ் காய்ச்சல்..
அறிகுறிகள் என்ன?
வைரஸ் காய்ச்சல்..
அறிகுறிகள் என்ன?
இந்தியாவில் H3N2 வைரஸ் பரவலால் பலரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உடல் வலி, சோர்வு, வறண்ட தொண்டை, தலைவலி, சளி, காய்ச்சல் இதன் அறிகுறிகளாகும். H3N2 வைரஸால் நீங்கள் பாதிக்கப்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிக்கவும், போதுமான நேரம் தூங்குங்கள், வெளியே செல்லக் கூடாது. மேற்கண்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மருத்துவரை உடனடியாக அணுகி ஆலோசனை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும்.
எத்தனை பேர் வருமான
வரி செலுத்துகிறார்கள்?
வரி செலுத்துகிறார்கள்?
நாட்டு மக்கள் தொகை 142.21 கோடியாக இருக்கும் நிலையில், அவர்களில் வெறும் 4%, அதாவது 3.51 கோடி பேர் தான் கடந்த நிதி யாண்டில் வருமான வரி செலுத்தி யதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 51.69 கோடி பேர் பான், ஆதார் கார்டுகளை இணைத் துள்ளதாகவும், அவர்களில் 7.20 கோடி பேர் வருமான வரி (ITR) தாக்கல் செய்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 50% பேர் வருமான வரி செலுத்துவதாகவும் அவர்கள் ஒப்பிடுகின்றனர்.
அக். 14-இல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்
அக்.14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல்நாளில், மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் & வால்பாறை சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், 2025-2026 கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப் படவுள்ளது. எத்தனை நாள்கள் கூட் டத்தை நடத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.