ஜாதி வித்தியாசமோ உயர்வு – தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும்; மீறிப் படிக்க ஆரம்பித்தால், அவற்றைப் பறிமுதல் செய்யவேண்டும். உயர்வு – தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதி பதிகளை எல்லாம் சிறையில் அடைத்து விட வேண் டும். பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்தால், மடாதி பதிகளைத் தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, அவற்றை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குத் தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்திட வேண்டும்.
(‘குடிஅரசு’ 9.12.1928)