ஈரோடு, செப்.25- தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சமூகநீதிக் கூட்டமைப்புச் சார்பில் 21/9/2025 அன்று ஈரோட்டில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மற்றும் சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் புலவர் செந்தலை ந.கவுதமன் ஆகிய இருவரும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஈரோட்டுக்கு முன்பே வந்து விட்டனர். ஆனால் கருத்தரங்கு தொடங்கும் முன்பே மிக மிகக் கடுமை யான மழை கொட்டத் தொடங்கி விட்டது. எனவே ஏறக்குறைய ஒரு மணி நேரம். கழிந்த பின், தாமதமாகக் கருத்தரங்கு தொடங்கியது.
பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பாகக் கனிமொழி நாடகக்குழு வினர் பகுத்தறிவுக் கருத்தினை வலியுறுத்தும் வண்ணம் ஒரு நாட கத்தை மிகவும் ஈர்க்கத்தக்க வகையில் நடத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றனர். அவர்களுக்கு எஸ்டிபிஅய் கட்சியின் கோவை மண்டலச் செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் சிறப்புச் செய்தார்
அடுத்துச் சமூகநீதிக் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் கண. குறிஞ்சி தலைமை உரையாற்றி
னார்.
அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ் எம் சாதிக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வழக்குரைஞர் அருள் மொழி மற்றும் செந்தலை ந.கவுதமன் ஆகியோரின் சிறப்புரையாற்றினர்.
பிறகு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சித்திக் அவர்களும், சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல் ராமன் அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாளர்களுக்குச் சிறப்புச் செய்தனர்.
சமூகநீதி கூட்டமைப் பைச் சார்ந்த சிந்தனைச் செல்வன் நன்றி உரை யாற்றினார். தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே. பொன்னையன் மேடை நெறியாளராக இருந்து நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். தொடர் மழைக்கு இடை யிலும் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் இறுதிவரை காத்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தது பாராட்டத்தக்கதாக அமைந்தது.