நாகை, செப்.25- இந்தியா ஓ.என்.ஜி.சி. ஓ.பி.சி & எம்.ஓ.பி.சி ஊழியர்கள் நலச் சங்கம், காவேரி கிளை ஆயோஜனையில், நாகை ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் 22.09.2025 அன்று நடைபெற்றது.
முக்கிய விருந்தினர்கள்:
நிர்வாக இயக்குநர் மற்றும் அசெட் மேலாளர் உதய் பஸ்வான் தலைமை வகித்தார். டிரில்லிங் சர்வீஸ் சங்கத்தின் செய லாளர் சி.எம். அம்பேத்கர்.
சங்கத்தின் தலைவர் சி. சேதுபதி, தலைவரை என். சிவசங்கர், மேனாள் செயலாளர் அன்பரசு மற்றும் சங்க அலுவலக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வின் சிறப்பம் சங்கள்: தமிழிலும் ஆங்கி லத்திலும் பேச்சுப் போட்டி நடத்தப்
பட்டது. மாணவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிய சிறந்த உரைகளை நிகழ்த்தினர்.
பரிசுகள்: முதல் பரிசு – ரூ. 5,000/- இரண்டாம் பரிசு – ரூ.3,000/- மூன்றாம் பரிசு – ரூ.2,000/- (ஒவ்வொரு மொழிக்கும்) ஆறுபேருக்கு ஆறுதல் பரிசு – ரூ.600/- மதிப்பிலான பரிசுகள்.
வரைகலை/போஸ்டர் போட்டி நடத்தப்பட்டு, தலா ரூ.600/- மதிப்பில் மூன்று பரிசுகள் வழங்கப் பட்டன.
ஆங்கிலத் துறை தலைவர் ஆர். மணி மொழி நன்றி கூறினார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் சோபியா பொற்செல்வி தலைமை தாங்கி அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தார்.
இந்த நிகழ்வு, தந்தை பெரியாரின் கொள்கைகளை நினைவுபடுத்தியதோடு, இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்த சிறப்பான ஒன்றாக கவம் அமைந்தது.