திருப்பத்தூரை உலுக்கிய தந்தைபெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

திராவிடர் கழகம்

திருப்பத்தூர், செப்.25- 

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தந்தைபெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு (17.9.2025)  சுமார் 100 இடங்களுக்கு  மேல் தந்தை பெரியார் படங்களுக்கும் அனைத்து சிலைகளுக்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி சமுக நீதி நாள் உறுதி மொழி ஏற்று மிக எழுச்சியுடன்  விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் நகர் முழுவதும் கழகக் கொடிகள் கட்டப்பட்டும். பேனர்கள், பெரியார் படங்கள் என்று வைத்தும் நகரமே விழா கோலம் பூண்டது.

செப்டம்பர் 17அன்று மாலை 5.00 மணியளவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தைபெரியார் சிலை அருகில்  தி. க, தி. மு. க, காங்கிரஸ்,  ம. தி. மு.க, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, ரோட்டரி உறுப்பினர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி, தே. மு. தி. க, என்று அனைத்து அமைப்புகளை சார்ந்த பெரியார் உணர்வாளர்கள் அனைவரும் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் ஒன்று  கூடினர்.

அனைவரையும் மாவட்டச்செயலாளர் பெ. கலைவாணன் வரவேற்றார்.  மோகன்காந்தி (தமிழ்த்துறை பேராசிரியர்) எஸ். சுபாஷ் சந்திரபோஷ் ( மண்டல செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ) அண்ணா சரவணன் ( மாநில பகுத்தறிவாளர்கழகப் துணைப் பொதுச்செயலாளர்) ஆகியோர்கள் விழா வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். பிறகுபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்று  அங்கே தந்தை பெரியார் படத்தை சுற்றி கருப்பு, சிகப்பு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டியிருந்த நான்கு சக்கர வாகனம் பயணிக்க, அதன்முன்னே பறை ஓசை முழங்க பள்ளி மாணவர்கள் பெரியார் படத்துடன் பொன்மொழிகள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தி, கழக தோழர்கள் உள்பட அனைத்து அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் ஊர்வலாமாக  வி.பி.சிங் மண் டபம் அருகில் தந்தை பெரியார் சிலை  வரை சென்றனர். அங்கே இருக்கும் பெரியார்சிலைக்கும் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து

வெ.அன்பு  மாவட்ட தலைவர் ப.க. விழா சிற்றுரையுடன் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன்  பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விழா முடிவுற்றது.

திராவிடர் கழகம்

இவ்விழாவில்  பங்கேற்ற தோழர்கள்

எ. அகிலா (மாநில திராவிடர் கழக மகளிரணி பொருளாளர்) சி. தமிழ்ச்செல்வன் கழக மாவட்ட துணைத்தலைவர், சி. எ. சிற்றரசன் ( மாநில  கழக இளைஞரணி துணைச் செயலாளர்) ஏ. டி. ஜி. சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), மா.சி. பாலன் (மாவட்ட காப்பாளர்,) எம்.ஞானப்பிரகாசம் (மாவட்ட விடுதலை வாசகர் வட்டத்தலைவர்) வ. புரட்சி (மாவட்ட விடுதலை வாசகர் வட்ட துணைச்செயலாளர்) எம். என். அன்பழகன் ( மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்)
இரா. கற்பகவள்ளி (மாவட்டத்தலைவர் மகளிரணி)  நா. சுப்புலட்சுமி,  சி. சபரிதா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்)  வெ. அன்பு (மாவட்டத்தலைவர் ப. க)

பெ. ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) இரா. நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர் ) இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்) கோ. திருப்பதி (மாவட்டச்செயலாளர்         ப. க.) கே. மோகன் (மாவட்ட பெ. கட்டுமான தொழிலாளரணி செயலாளர்) அக்ரிஅரவிந்த் (நகர செயலாளர் இளைஞரணி) மோ. நித்தியானந்தம் (மாவட்ட துணைதலைவர் இளைஞரணி) சு. குமரவேல் (மாவட்ட துணைச் செயலாளர் ப.க.) கா. நிரஞ்சன் (மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி)                 மோ. வசீகரன் (மாவட்ட அமைப்பாளர் மாணவர் கழகம்) மு. வெற்றி மாதனூர் (ஒன்றியத் தலைவர்) வெங்கடேசன் ( மாவட்ட ஒன்றியச் செயலாளர்) பச்சை முத்து ( ஏலகிரி பொறுப்பாளர்) ரத்தினவேல் (கழக பொறுப்பாளர்) பெரியார் செல்வம் (இளைஞரணி) பிராபாகரன்( கற்பிபயிலகம்) தனஞ்செயன் தி. க. ஆகியோர்  பங்கேற்றனர்.க. இனியவன்,  க. உதயவன், சி. இன்பா
(மாணவர் கழகம்) ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *