திருச்சி, செப். 25- தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் பெரியார் மெடிக்கல் மிஷன் இயக்குநர் மருத்துவர் கவுதமன் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அறிவுறுத்தலின்படி டாக்டர் முைனவர் சுல்தானா தலைமையில் 17.9.2025 அன்று நடைபெற்றது.
மகப்பேறு மருத்துவர் தவுலத், பல் மருத்துவர் பிரசன்னா, பொதுநல மருத்துவர் முனைவர் சுல்தானா மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அலுவலர்கள், பெரியார் மணியம்மை மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர்கள் வி.ஹெலன்பிரின்சி, ஆர்.காமாட்சி, பி.ஹேமமாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான மருத்துவப் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.