திருச்சி, செப். 25- பெரியார் மணியம்மை மருத்துவமனையின் துணை செவிலியர் பயிற்சி நிறைவு பெற்ற மாணவர்களுக்கு பெரியார் மருத்துவக்குழுமத்தின் கீழ் சான்றிதழ் வழங்கும் விழா 22.09.2025 அன்று காலை 11 மணிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது.
பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் முனைவர் சுல்தானா தலைமையேற்று உரையாற்றினார். அவர் தமது உரையில் பயிற்சி காலத்தில் செயல்பட்டதை விட மிகப் பொறுப்புடனும், திறமையுடனும் பணி வாய்ப்பில் செயல்பட வேண்டுமென்று கூறினார்.
பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் கவுதமன் மற்றும் பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தாமரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தமது வாழ்த்துரையில் மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சிகளை செவிலி யர்கள் தெரிந்து வைத்திருப்பதுடன், அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர் ஹெலன் நன்றி கூறினார்.
பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர்கள் காமாட்சி, ஹேமா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.