வல்லம், செப். 25- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பகடிவதை தடுப்பு குழுக்கூட்டம் 15.09.2025 அன்று நடைபெற்றது.
பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் பகடிவதை தடுப்பு குழு (Anti- Ragging Committee) ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஓவ்வொரு ஆண்டும் உறுப்பினர்களாக உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள், பேரூராட்சி தலைவர், NGO, பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
2025ஆ–ம் ஆண்டிற்கான பகடிவதை தடுப்புக் குழுக்கூட்டம் (Anti-Ragging Committee Meeting-2025) 15.09.2025 அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது. வல்லம், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கே.கணேஷ்குமார், காவல் உதவி ஆய்வாளர் கே.கண்ணன், பேரூராட்சி தலைவர் கே..செல்வ ராணி கல்யாணசுந்தரம், பவர் அமைப்பின் செயலாளர் முனைவர் உ.பர்வீன், முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன், மாணவ ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ், துறைத் தலைவர்கள் மற்றும் மாண வர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, பகடிவதை தடுப்பு குழுவின் செயல் பாடுகளைப் பற்றி விளக்கி கூறிய அவர் இப்பாலிடெக்னிக் கல்லூரியில் பகடிவதை என்பது இல்லை என்று குறிப்பிட்டார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கே.கணேஷ்குமார் பகடிவதை ஒரு சமூக குற்றம் என்று கூறிய அவர் மாணவர்களிடையே பகடி வதை பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்று குறிப்பிட்டார். இக்கூட்டத்தி;ல் கலந்து கொண்ட இரண்டாமாண்டு மாணவியின் பெற்றோர் கே.முனியசாமி தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
மாணவ ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ் நன்றியுரையாற் றினார்.