சென்னை, செப். 24- மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 2025-2026ஆம் கல்வியாண்டுக் கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று முன்தினம் (22.9.2025) தொடங்கினாலும், கலந்தாய்வில் இடங்களை உறுதி செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளிடம் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கைகுழு, அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி டீன், முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அனைத்து தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுகள் மற்றும் தேசிய மருத் துவ ஆணைய வழிகா ட்டுதல்களை தவறாமல் கடைப் பிடிக்க அறிவுறுத் தப்படுகின்றன. 2025-2026ஆம் கல்வி யாண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு, கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத்தவிர வேறு அதிக கட்டணத்தைக் கோரினால், அரசாங்கத்தால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவி களிடம் இருந்தோ, பெற்றோரிடம் இருந்தோ இதுதொடர்பாக ஏதேனும் குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டால், அந்தந்த நிறுவனம் மீது உரிய அதிகாரிகள் மூலம் அங்கீகாரத்தை திரும்பப் பெறுதல் அல்லது கல்லூரியின் இணைப்பை ரத்துசெய்தல் உள் ளிட்ட நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.