வாசிங்டன், செப்.24- அமெரிக்காவில் பணி யாற்றும் வெளிநாட்டினர் எச்-1பி விசா பெற்று பணியாற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலா னோர் இந்தியர்கள் ஆவர்.
இதற்கிடையே, இந்த விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் 1லட்சம் டால ராக (ரூ.88 லட்சம்) உயர்த்தினார். கடந்த 21ஆம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, விசா கட்டண உயர்வுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற் காக கட்டணம் உயர்த்தப் பட்டதாக டிரம்ப் நிர் வாகம் கூறியுள்ளது. ஆனால், இதன்காரணமாக திறமையானவர்கள் வேலைக்கு கிடைக்காமல், அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற கருத்து எழுந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் திறமையான மருத்துவர் களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சமும் உருவாகி உள்ளது. ஆகவே, கட்டண உயர்வில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது பற்றிவெள்ளை மாளிகை பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறியதாவது:-
விசா கட்டண உயர்வின் முழுமையான தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொழில்துறை ஏற்கெனவே தனது ஆரம்பகட்ட ஆய்வை வெளியிட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள தொழில் துறைக்கு புத்தாக்கம், படைப் புத்திறன் ஆகியவற்றில் பங்கு உள்ளது. விசா கட்டண உயர்வு அறிவிப்பு, விலக்கு அளிக்கவும் அனுமதி அளிக்கிறது. எனவே, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.