தஞ்சை, செப். 24- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழக சார்பில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் பட ஊர்வலம் – பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 20.9.2025 மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.

பெரியார் பட ஊர்வலம்
ஆற்றுப்பாலம் தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் படத்துடன் கிளாரினெட் வாத்தியம் முழங்க கழகத்தோழர்களின் எழுச்சி முழக்கத்துடன் ஊர்வலம் தொடங்கியது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்றார். மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் ஊர்வலத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாநில மாவட்ட ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் ஊர்வலத்திற்கு முன்னிலை ஏற்றனர் தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில் தொடங்கிய பெரியார் பட ஊர்வலம் காந்திஜி சாலை, தந்தை பெரியார் சிலை, சிவகங்கை பூங்கா, மேலவீதி, தெற்குவீதி, கீழராஜவீதி, கொண்டி ராஜபாளையம், கீழவாசல் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பனகல் கட்டடம் அருகில் வந்தடைந்தது.
இசை நிகழ்ச்சி
திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் காவலர் பொன்னரசு, கருங்குயில் கணேசன் ஆகியோர் இணைந்து நடத்திய இன எழுச்சி இசை நிகழ்ச்சி தொடக்கத்தில் நடைபெற்றது.
பொதுக்கூட்டம்
தொடர்ந்து நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கு மாநகர கழக தலைவர் செ.தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாநகர கழக செயலாளர் இரா.வீரக்குமார் வரவேற்பு உரையாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரபாண்டியன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட கழக செயலாளர் அருணகிரி, அகில இந்திய மகளிர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சொர்ணலட்சுமி, மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி.இராஜேந்திரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திருவையாறு, சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார். மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட் நன்றி கூறினார்
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், திமுக மாநகர செயலாளர் சண்.ராமநாதன், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் அழகிரிசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் முனைவர் எழிலரசன், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு நகரத் தலைவர் கவுதமன்.
பூதலூர் ஒன்றிய செயலாளர் அல்லூர் பாலு, புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் துரை, ஈ.பி காலனி பகுதி தலைவர் துரை சூரியமூர்த்தி, செயலாளர் பரந்தாமன், கரந்தை பகுதி தலைவர் விஜயன், செயலாளர் தனபால், மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் தேவா, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம், பொதுக்குழு உறுப்பினர் வடசேரி ஞானசிகாமணி, கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன், கழக சொற்பொழிவாளர் முனைவர் ராஜவேல், பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பெரியார் கண்ணன் மற்றும் திராவிடர் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
