புதுடில்லி, மே26- கார்ப்பரேட் ஊடகங்களால் உருவாக்கப் பட்ட பிரதமர் நரேந்திர மோடி, இப்போதுவரை ஊதிப் பெரி தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர் என்றால் அது பிரதமர் மோடி தான் என்று ஒரு பிம்பம் தொடர்ச்சியாக கட்டமைக்கப் பட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வி யடையும் போதெல்லாம், நாடாளுமன்றத் தேர்த லில் இது எதிரொலிக்காது; மோடியின் செல் வாக்கில் இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத் தாது; இப்போதும் மோடியே தனிப்பெரும் தலைவர்; நாடாளு மன்றத் தேர்தல் வந்தால் மக்கள் பாஜகவுக்கே மீண்டும் வாக்களிப் பார்கள் என்று ஊடகங்கள் உடனடியாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிடும்.
மோடியை விட்டால் வேறு ஆளில்லை என்று எண்ணத்தை வலுக் கட்டாயமாக மக்கள் மத்தியில் திணிக்கும். அப்படித் தான் இப்போதும் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள் ளது.
கருநாடகத் தோல்விக்குப் பிறகும் இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவராகவும், நாட்டின் உயர் பதவியான பிர தமர் பதவிக்கு சரியான நபர் என்றும் நரேந்திர மோடியையே பெரும்பாலானவர்கள் கைகாட்டுகிறார்கள் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப் பட்டுள்ளது. சிறு வித்தியாசம் என்னவென்றால், இந்த முறை அவர்களாலேயே மோடியின் சரிவு ஆரம்பித்துள்ளதையும், அவருக்கு எதிராக முன்னிறுத் தப்படுபவரான காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியின் செல் வாக்கு அதிகரித்து வருவதையும் மறைக்க முடியவில்லை என்பது தான்.
‘என்டிடிவி’ சர்வே
‘என்டிடிவி’ ஊடகமானது, ‘லோக்நிதி – சென்டர் பார் தி ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டி’ (சிஎஸ்டிஎஸ்) உடன் இணைந்து ‘நாட்டின் பிரபலமான தலைவர்கள் யார்?’ என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
கருநாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை அடுத்து, மே 10 முதல் 19 வரை 19 மாநிலங்களில், 71 தொகுதிகளில் 7,202 பேரிடம் இந்த கணக் கெடுப்பு மேற்கொள்ளப்பட் டுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், “பிரதமர் மோடியின் புகழ் வலுவாக உள்ளது. பாஜகவின் வாக்கு சதவிகிதம் சீராக உள்ளது. சர்வே-யில் பதிலளித்தவர்களில் சுமார் 43 சதவிகிதம் பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறை யாக வெற்றிபெற வேண்டும்” என கூறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 38 சதவிகிதம் பேர் பாஜக ஆட்சியை ஏற்கவில்லை என்று கூறியிருப்பதையும் சர்வே குறிப்பிட்டுள்ளது.
வாக்களிப்போம் என்று சுமார் 40 சதவிகிதம் பேரும், காங்கிரஸுக்கு வாக்களிப்போம் என்று 29 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த சர்வேயில், பாஜக-வின் வாக்கு சதவிகிதம் 2019-இல் 37 சதவிகித மாக இருந்தது, 2023-இல் 39 சதவிகிதமாக அதிகரித் துள்ளது என்று கருத்துக் கணிப்பு கூறி யுள்ளது. மற்றொரு புறத்தில், 2019-இல் 19 சத விகிதமாக இருந்த காங்கிரசின் செல்வாக்கு, 2023-இல் 29 சதவிகிதமாக அதி கரித்துள்ளதா கவும் குறிப்பிட்டு உள்ளது.
பாஜகவைவிட காங்கிரசு செல்வாக்கு அதிகரிப்பு
அதாவது, பாஜக-வின் செல் வாக்கு 2 சதவிகிதம் மட்டுமே கூடியிருக்கும் நிலையில், காங் கிரசின் செல்வாக்கு 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சர்வே-யில் பதிலளித்தவர்களில் 43 சதவிகி தம் பேர், இன்று தேர்தல் நடந் தால், நரேந்திர மோடி தான் பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர். ராகுல் காந்தியை 27 சதவிகிதம் பேர் ஆதரித் துள்ளனர்.
இதிலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2019இல் 44 சதவிகிதம் பேர் மோடியை ஆதரித்த நிலையில், அது 2023-இல் 1 சதவிகிதம் குறைந்து 43 சதவிகிதமாகி உள்ளது. ஆனால், 2019-இல் ராகுலை 24 சதவிகிதம் ஆத ரித்த நிலையில், அது 2023-இல் 27 சதவிகிதமாக அதிகரித் துள்ளது.
மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு யார் சவாலாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு, 34 சதவிகிதம் பேர் ராகுல் காந்தி என்று கூறியுள்ளனர். 11 சதவிகிதம் பேர் அரவிந்த் கெஜ்ரிவால் என் றும், அகிலேஷ் என 5 சதவிகிதம் பேரும், மம்தா என 4 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
ராகுல் காந்தியைப் பொறுத்த வரை, 26 சத விகிதம் பேர் “அவரை எப்போதும் விரும்பு கிறோம்” என்றும், 15 சதவிகிதம் பேர் ‘இந்திய நடைப்பயணம்’ நடைபெற்ற பின்னர் விரும்பு கிறோம் என்றும் தெரிவித் துள்ளனர்.
எனவே, ஊடகங்கள் எவ்வளவுதான் மறைத்தாலும், பாஜக மற்றும் பிரதமர் மோடி யின் செல்வாக்கு சரிந்து வரு வதையும், மக்களவைத் தேர் தலுக்கு சரியாக ஓராண்டு இருக்கும் நிலையில், எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரளும் பட்சத்தில், இந்த சரிவு மிகப் பெரிய வீழ்ச்சியாக மாறும் என்பதையே கருத்துக் கணிப் புக்கள் உணர்த்துகின்றன.