சேலம்,மே26- சேலத்தில் புதியதாக ‘டிராஃபிக் பிளானிங் செல்’ என்ற தனிப்பிரிவு 24.5.2023 அன்று தொடங்கப்பட் டது. இந்த பிரிவு மூலம் காவல்துறையினர் சேலம் மாநகரம் முழுவ தும் ரோந்து சென்று, எங்கு அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என கண்காணித்து, சாலை விபத்து நடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபட முடியும். மேலும், விபத்து அதிகளவு நடக்கும் பகு தியில் பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் கருத்து கேட்டு விபத்துகளை தடுக்க முயற்சி மேற்கொள் வார்கள்.
இது தவிர எந்தெந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என கண் காணித்து அந்த பகுதியில் வாகன நெரிசலை தடுப் பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும்.
இந்த புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்’ பிரிவு மூலம் விபத்துகள் தடுக் கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்’ பிரிவு 24.5.2023 அன்று திறக்கப் பட்டது. இதை மாநகர காவல் ஆணையர் விஜய குமாரி திறப்பதாக இருந் தது. விழா நேரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங் கட்ராமன் என்பவரை கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து காவல் ஆணையர் விஜய குமாரி சிறப்பு செய்தார்.
பின்னர் அவர் பேசும் போது, ‘சேலம் மாநகரப் பகுதிகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் . சென்னை காவல்துறையினர் போல பணியாற்றி, போக்குவ ரத்து நெரிசல் இல்லாமல் செய்ய என்னென்ன நட வடிக்கை எடுப்பது என ஆய்வு செய்து, அதற்கான தீர்வை காண வேண்டும்,’ என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் கவுதம் கோயல், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் உதயகுமார், போக்குவ ரத்து பிரிவு காவல் ஆய் வாளர் ஜெயவேல் மற் றும் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் பங்கேற்றனர்.