வேதங்கள்தான் அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமாம்! இஸ்ரோ தலைவரின் உளறல்!

2 Min Read

உஜ்ஜைனி, மே 26  ஜோதிடத்தை மய்யமாக வைத்து எழுதப்பட்ட வேதங்கள் தான் அறிவியல் கோட்பாடு களின் பிறப்பிடம் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம் நாத் வேத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப் பிடமே வேதங்கள்தான். ஆனால், மேற்குலக படைப்பு கள்போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட் டுள்ளன” என்று சமஸ்கிருத வேத பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பாணினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், 

“அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்களே. ஆனால், மேற்குலக படைப்பு கள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப் பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக அறிவியல் எனப் பலவற்றிலும் வேதங்களே முன்னோடி.

ஆரம்ப காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு எழுத்துரு இல்லாமல் பேச்சு வழக்கு மட்டுமே இருந்ததால், அதில் சொல்லப்பட்ட அறிவியல் அபகரிக்கப்பட்டு, மேற்குல கின் தத்துவங்கள் போல் கொடுக்கப்பட்டுள்ளன. பின் னாளில் தேவநாகரி எழுத்துரு வந்தபின்னர் சமஸ்கிருத அறிவு செழித்தோங்கியது.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளமானவை. வானியல், மருத்துவம், அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் வானூர்தி அறிவியல் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகள் சமஸ்கிருதத்தில் எழு தப்பட்டன. இதற்கு சூர்ய சித்தாந்தமே எடுத்துக்காட்டு. என் கல்விப் பருவத்தில்,  சூரிய குடும்பம், கால அளவு மற்றும் பூமியின் அளவு மற்றும் சுற்றளவுப்பற்றி பேசும் சமஸ்கிருத புத்தகத்தால் ஈர்க்கப்பட்டே அது தொடர்பாக நான் படித்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இவர் கூறும் ‘‘சமஸ்கிருத சூரிய சித்தாந்தம்” நூல் கூறுவது என்ன?

சமஸ்கிருத சூரிய சித்தாந்தம் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜோதிடத்தில் பூமிதான் முக்கியமானது, அதில் சூரியன்கூட கோள் தான், அதுமட்டுமல்லாமல் இல்லாத கற்பனைக் கோள்களான ராகு கேதுக்கள் உள்ளன.   சூரியனுக்கு மனைவிகள் கூட உள்ளதாக அந்த சமஸ்கிருத சூரிய சித்தாந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதைப் படித்துத் தான் வானவியல் அறிவியல் தொடர்பாக ஈர்க்கப்பட்டேன் என்று இஸ்ரோ தலைவர் கூறியிருப்பது நகைப்பிற்கும், வெட்கத்துக்கும் உரியதே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *