அனைவருக்கும் வணக்கம்,
புத்தக கண்காட்சிக்கு வந்த புதிய பார்வை கொண்ட பெண் ஒருவர் பெரியார் புத்தக அரங்கத்திற்கு வந்திருந்தார். அவருடன் பேசிய நேர்காணலில் அவர் கூறிய பெரியார் பற்றிய கருத்துகள் வித்தியாசமாக இருந்தது. அடுப்படியை கடந்து, படிப்பறிவு பெற்று, விமானப்படி மிதித்து பெண்கள் உயர்ந்து வருகிறார்கள் என்றால் அதற்கு தந்தை பெரியார் ஒரு முக்கிய காரணம். அவரைப் பிடிக்காதவர்கள் இருப்பதற்கு காரணம் அவரை படிக்காதவர்கள்தான் என்றால் அது வியப்பில்லை. சிந்தித்துப் பார்த்து உனக்கு சிந்தையில் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள் என்று எவர் மீதும் கருத்தைத் திணிக்காதவர் பெரியார் மட்டுமே என்று அவர் கூறிய பல கருத்துக்கள் முழுமையாக Periyar Vision OTT இல் உள்ளது. பெண்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் பார்த்து கேட்டு பயன்பெற கூடிய காணொளியை இன்றே பார்த்து உணருங்கள்.
-L அபிராமி
திருச்செங்கோடு
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொளிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com