சமூக நீதி நாளான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேரள மாநிலம் வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் (17.09.2025) கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் சேத்தன் குமார் மீனா (அய்.ஏ.எஸ்.) தந்தை பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூடுதல் ஆட்சியர் சிறீஜித், கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ. செந்தில் அண்ணா, வருவாய் கோட்டாட்சியர் தீபா கேபி, வைக்கம் நகராட்சி தலைவர் பிரீத்தா ராஜேஷ், வட்டாட்சியர் திரு.விபின் பாஸ்கரன், நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.