கோலாலம்பூர், செப்.23 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, மலேசிய திராவிடர் கழக தேசிய இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு சார்பில் இளைஞர்களுக்கான உருட்டுப் பந்து (Bowling) விளையாட்டுப் போட்டி கடந்த செப்டம்பர் 14, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு பெத்தாலிங் ஜெயா, கோத்தா டாமான்சாராவில் அமைந்துள்ள Juara Bowling Alleyயில் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் பா.சோமசம்பந்தனார் தலைமையில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநிலத்தின் 12 கிளை களிலிருந்தும் இளைஞர்கள் உற்சாகமாக பங் கேற்றனர். கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா மாநிலங்களின் பொறுப் பாளர்களும் கலந்து கொண்டு, போட்டியாளர்களுக்கு உற்சாகம் ஊட்டினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடத்தப்படும் என தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பா.சோமசம்பந்தனார் பாண்டியன் அறிவித்தார்.
மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் சா.இரா.பாரதி சிறப்பாக கலந்து கொண்டு போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தேசிய துணைத் தலைவர் இரா.மனோகர், தேசிய உதவித் தலைவர் பெ.இராசேந்திரன், பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், நிதிச் செயலாளர் இரா.காளிதாசன், தேசிய இளைஞர் செயலாளர் நெ.நெடுஞ்சுடர், தேசிய மகளிர் தலைவர் சு.குமுதா, தேசிய மகளிர் செயலாளர் க.சாந்தி, மத்தியச் செயலவை உறுப்பினர்கள் சு.பாலு, பா.விக்கினேசுபாபு, சிலாங்கூர் மாநிலத் தலைவர் மு.சு.ம.அறிவாணன், மாநிலச் செயலாளர் பொன்.தேன்கவி, மாநில துணைத் தலைவர் இராமையா, டிங்கில் கிளைத் தலைவர் வீ.அன்பழகன், பேராக் மாநிலச் செயலாளர் இரா.கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன், இளைஞர்களின் திரளான பங்கேற்பு, மலேசிய திராவிடர் கழகத்தின் சமூக மற்றும் இளைஞர் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்ததாக ஏற்பாட் டாளர்கள் வலியுறுத்தினர்.