கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று காமெடியாக பலரிடம் கூறுவேன் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், எந்த மனிதரும் ஜாதி, மதம், மொழியால் உயர்ந்தவர் அல்ல, மாறாக அவர்களின் குணத்தாலேயே உயர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பிராமணர் குறித்த நிதினின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
ஒரேயொரு முதலமைச்சர் மட்டுமே ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார்
ஜெய்ராம் ரமேஷ்
2006 -2014 வரை ஒரேயொரு முதலமைச்சர் மட்டும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார், அவரே பிறகு பிரதமராகி ஜி.எஸ்.டி.யின் பாதுகாவலராக உரு வெடுத்தார் என்று பிரதமர் மோடியை காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஜிஎஸ்டி-யில் சமீபத்திய சீர்திருத்தங்கள் குறைவாகவே உள்ளது என்ற அவர், சிறு குறு தொழில் துறையின் நடைமுறை சிக்கல்களை எளிதாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சீர்திருத்தம் தாமதமானது என்றும் சாடினார்.
இந்திய ரூபாயை இங்கெல்லாம் அப்படியே பயன்படுத்தலாம்
பொதுவாகவே நாம் வெளிநாடுகளுக்கு சென்றால், அங்குள்ள நாணயத்திற்கு ஏற்ப நமது ரூபாயை மாற்றுவோம். ஆனால், நேபாளம், பூட்டான், இலங்கை, சிங்கப்பூர், UAE, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நமது ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தலாம். அங்குள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் (அறைகள்) டாக்சிகள் ஆகியவற்றில் இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லு படியாகும். இது பொதுவாக சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு கண் மை போடுறீங்களா? அபாயம்!
கண் திருஷ்டிக்காக குழந்தைகளின் கண்களுக்கு சிலர் மை இட்டுவிடுவர். ஆனால் இப்படி செய்வது குழந்தைகளின் கண்களை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சில கண் மைகளில் இருக்கும் ஈயம் (Lead) நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம் என்கின்றனர். அதோடு, குழந்தைகளின் கண்கள் மென்மையானவை என்பதால் அவர்களுக்கு நோய்தோற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறுகின்றனர்.