திருச்சி, செப். 23- திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகம் பெரியார் உயராய்வு மய்யம் சார்பில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா, பெரியார் விருதுகள் வழங்கும் விழா, பல்கலைக்கழக குளிர்மை அரங்கில் (செப்.17) அன்று நடைபெற்றது.
இவ் விழாவிற்கு பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் அ.கோவிந்தன் தலைமை வகித்தார்.
விழாவிற்கு முனைவர் வேலு,ராஜேஸ் கண்ணன், முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகிய துணைவேந்தர் குழுவினர் தலைமை வகித்து 2024-2025க்கான பெரியார் விருதை முனைவர் கல்பாக்கம் அ.இராமச்சந்திரனுக்கும், பெரியார் பரிசு முனைவர் கருவூர் கன்னல் என்கிற ஆர்.சிவலிங்கத்துக்கும் வழங்கினர். பல்கலைக் கழகப் பதிவாளர் (பொ) ஆர்.காளிதாசன் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியா ளர்கள், மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.