டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மூன்றாவது மொழி கற்க வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம்; வெட்டிப் பேச்சு என விமர்சனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாட்னாவில் விரைவில் முடிவு.
* தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப் பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 67 சதவீத இட ஒதுக்கீடு ஒதுக்க அரசு முடிவு.
தி டெலிகிராப்:
* அய்அய்டிகள் மற்றும் அய்அய்எம்கள் உட்பட கல்வி நிறுவனங்களில் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவு களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்போது தங்கள் வளாக அனுபவங்களையும் சவால்களையும் பகிர்ந்து கொள்ள நிதி ஆயோக் கணக்கெடுப்பு நடத்த முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் சட்டமன்ற தேர்தலில் எல்.ஜே.பி (ஆர்.வி) கட்சிக்கு கவுரவமான இடப்பங்கீடு தரப்பட வேண்டும் என்கிறார் அக்கட்சியின் தலைவர், ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பஞ்சாப் முதல்வர் பகவத்மானுக்குப் பிறகு, கல்வித் துறையில் திமுக அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்துக்கு அழைப்பு.
* ‘5,000 ஆண்டு கால பாகுபாடு’: உத்தரப் பிரதேசத்தில் ஜாதிப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறை ஆவணங்களிலும், பொது இடங்களிலும் ஜாதி குறித்த குறிப்புகளை முழுமையாக தடை செய்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவு குறித்து, “5000 ஆண்டுகளாக மனதில் வேரூன்றிய ஜாதி பாகுபாட்டை ஒழிக்க என்ன செய்யப்படும்? “மேலும், உடை, உடை மற்றும் குறியீட்டு அடையாளங்கள் மூலம் ஜாதி காட்சிப்படுத்துவதால் எழும் ஜாதி பாகுபாட்டை அகற்ற என்ன செய்யப்படும்? ஒருவரை சந்திக்கும் போது அவர்களின் பெயருக்கு முன் ‘ஜாதி’ பற்றி கேட்பதை உள்ளடக்கிய ஜாதி பாகுபாட்டின் மனநிலையை முடிவுக்குக் கொண்டுவர என்ன செய்யப்படும்?” என அகிலேஷ் கேள்வி.
– குடந்தை கருணா