சுயமரியாதைச் சுடரொளி மீரா ஜெகதீசன் அம்மையார் படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

5 Min Read

மாராப்பட்டு, செப். 23- சுயமரியாதைச் சுடரொளி மீரா ஜெகதீசன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு விஜய மகாலில் 13.9.2025 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வர வேற்கும் விதமாக ஆம்பூர் சான்றோர் குப்பத்தில் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழர் தலைவருக்கு
வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சரியாக காலை 10.30 மணிக்கு ஆம்பூர் சான்றோர் குப்பம் வருகை புரிந்தார். ஆசிரியர் அவர்களுக்கு தந்தை பெரியார் வாழ்க, ஆசிரியர் வாழ்க என்ற முழக்கங்களோடு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், மாவட்டத் தலைவர்  கே.சி.எழிலரசன் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

மேலும், ஓம் பிரகாஷ் (மாவட்ட தலை வர் விடுதலை சிறுத்தைகள்) சாமு வேல் செல்லப்பாண்டியன் (மாவட்ட விவசாய அணி செயலாளர் தி.மு.க.), ஜெ.சி.முத்து (மேனாள் நகர மன்ற உறுப்பினர் தி.மு.க.), எம். ஆர். ஆறுமுகம் (நகரச்செயலாளர் தி.மு.க.), எம்.அன்பு (நகர மன்ற உறுப்பினர் தி.மு.க.), உ.ஜெயராமன் (தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் பொதுச் செயலாளர்), பெ. கலைவாணன் (மாவட்டச்செயலாளர்), எம்.ஞானபிரகாசம் (மாவட்டத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம்), எம்.என்.அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர் வேலூர்), இரவி (நகர தலைவர் ஆம்பூர்), பன்னீர் செல்வம் (நகர அமைப்பாளர் ஆம்பூர்), பேராசிரியர் இளங்கோவன்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் துணைத் தலைவர்), சி.ஏ.சிற்றரசன் (மாநில துணைச் செயலாளர் இளைஞரணி), வெ.அன்பு (மாவட்ட தலைவர் ப. க.), அன்புச்சேரன் (நகர தலைவர் வாணியம்பாடி), கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப.க.), இராஜேந்திரன் (அமைப்பாளர் சோலையார்பேட்டை), பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றிய தலைவர்), இரா. நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்), எம்.மோகன் (தொழிலாளரணி அமைப்பாளர்), பன்னீர் (தொழிலாளரணி செயலாளர்), க.முருகன் (தொழிலாளரணி) ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

படத்திறப்பு

அங்கிருந்து ஆசிரியர் அவர்களை கழக கொடி ஏந்தி நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் அணிவகுக்க, காலை 11.00 மணியளவில் சுயமரியாதைச் சுடரொளி மீரா ஜெகதீசன் படத்திறப்பு நடைபெறும் அரங்கிற்கு வருகை புரிந்தார்.

படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு துவங்கியது. இந் நிகழ்விற்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார். மீரா ஜெகதீசன் குடும்பம் சார்பில் நாக சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

பிறகு, சுயமரியாதைச் சுடரொளி மீரா ஜெகதீசன் அவர்களின் படத்திறப்பு நடைபெற்றது, குடும்பத்தினராகிய ஜெ.துரைசாமி, ஜெ.வீரமணி, ஜெ.சுமதி, ஜெ.சித்ரா, துரை புஷ்பலதா, வீ.ராதிகா, மற்றும் அம்மையாரின் பேரன், பேத்திகள் இலக்கியா, பவித்திரா நாகம்மை, திவ்யா, மோகனா, காவ்யா, அழகு நாகப்பன், முன்னிலையில் ஆசிரியர் அவர்கள் மீரா ஜெகதீசன் அம்மையாரின் படத்தை திறந்து வைத்தார். அப்போது ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் வீ.மோகனா அம்மாவும் உடன் இருந் தார். தோழர்கள் அனைவரும் வீர வணக் கம் செலுத்தி முழக்கமிட ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் படத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து நினைவேந்தல் நடைபெற்றது.

தந்தை பெரியார்
தலைமையில் திருமணம்

மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன், மீரா ஜெகதீசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்பை வாசித்தார். அதில் மீரா ஜெகதீசன் அவர்கள் பிறந்தது 8.3.1946 அன்று. வடசேரியில் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை கல்வி பயின்றார். இவருடைய தாய் கண்ணம்மா, தந்தை சபாரத்தினம். இவருடைய தந்தை நீதிக் கட்சியைச் சேர்ந்தவர் அதனால் இயல்பிலேயே சுயமரியாதை கொள்கைகளில் ஊறி வளர்ந்தார் இவருக்கு மூத்த சகோதரர் சவுந்தர்ராஜன் மூத்த சகோதரி ராஜகுமாரி மீரா அவர்களுக்கும் வடசேரியைச் சேர்ந்த து.ஜெகதீசன் அவர்களுக்கும் 8.9.1965இல் தந்தை பெரியார் தலைமையில் வடசேரியில் திருமணம் நடை பெற்றது. மீரா அவர்களுடைய உடன் பிறப்புகளுக்கும் தந்தை பெரியார் தலைமையில்தான் திருமணம் நடை பெற்றது . இவர்களுக்கு இரண்டு பெண்: இரண்டு ஆண் குழந்தைகள். நால்வருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில்தான் திருமணம் நடை பெற்றது என்று குறிப்பிட்டார்.

மேலும் இதில் மேனாள் நீதிபதி பரஞ்ஜோதி, ஏ.சி.வில்வநாதன் (சட்ட மன்ற உறுப்பினர் ஆம்பூர்), கே.பி.பாபு (தி.மு.க), வி. எஸ். சாரதிகுமார் (நகர செயலாளர் தி.மு.க.) ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினார்கள்.

இறுதியாக ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். அவரது உரையில், மீரா ஜெகதீசன் அவர்களின் தந்தை சபாரத்தினம் நீதிக் கட்சியில் இருந்த காலத்திலிருந்து நம் கழக கொள்கையில் ஈடுபாடு கொண்டு இயக்கத்திற்காக உழைத்த குடும்பம். இவர்கள் குடும்பமே பேரன், பேத்திகள் என மூன்று தலைமுறை வரை, பகுத்தறிவு கொள்கைகளில் ஊறி வளர்த்தவர்கள்.

மீரா அவர்கள் மனுநீதி எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறையில் 15 நாள்கள் பார்வதி, சொர்ணாம்பாள், வீரமர்த்தினி ஆகிய தோழியர்களுடன் இருந்தவர். அதேபோல சென்னை சிறையிலும் இருந்தார். ஆம்பூரில் அஞ்சலக மறியலிலும் கலந்து கொண்டு கைதானார். தன் வாழ்நாள் இறுதிவரை இயக்கம் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார். சென்னை பெரியார் திடலில் இரண்டாண்டுகள் குடும்பத்தோடு வசித்தார்.டில்லியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, சிலை திறப்பு விழா, பெரியார் மய்ய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றவர்.இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் மீரா அம்மையார் அவர்களை சந்தித்து நலன் விசாரித்து சென்றோம்.தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்று அதை கடைபிடித்து தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் அம்மையார் அவர்கள், அடுத்த தலைமுறை இதை பின்பற்றி வாழ வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு நினைவேந்தல் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர் அவர்களிடத் தில் பெரியார் உலகிற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சி.ஏ.சிற்றரசன், மாவட்ட மகளிரணி செயலாளர் சி.சபரிதா மற்றும் சி.இன்பா ஆகியோர் இணைந்து தங்கள் குடும்பம் சார்பாக மூன்று இலட்சம் ரூபாயை வழங்கினார்கள். திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் பெ. கலைவாணன் மற்றும் அவர் வாழ்வினையர் மாவட்ட மகளிரணி தலைவர் இரா. கற்பகவள்ளி ஆகியோர் இணைந்து ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கினார்கள்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த அனை வருக்கும் மீரா ஜெகதீசன் அம்மையாரின் மகன் வழக்குரைஞர் ஜெ.துரைசாமி நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *