அரூர், செப். 23- மாநில பகுத்தறிவு கலைத்துறை, அரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் 14.9.2025ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் வெகு சிறப்பாக மாநாடு போல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னதாக நா.சதீஷ், வே சர்வேஸ்வரன் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பி ரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் பங்கேற்புடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.
மேடையில் இசைத்த பறையிசை நிகழ்ச்சியை தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டு களித்தார்.
பொதுக்கூட்டம் பெரியார் உலகத் திற்கான நிதியளிப்பு பொதுக்கூட்டம் நிகழ்ச்சிக்கு மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர் மாரி.கருணாநிதி தலை மையேற்று ஒருங்கிணைத்து நடத்தினார்.
மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அ.சத்திய மூர்த்தி, வீ.சிவாஜி, கழக பொதுக்குழு உறுப்பினர் வேங்கை தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப் பினர்கள் பழனி புல்ளையண்ணன், சிந்தாமணியூர் சுப்பிரமணி, சேலம் மாவட்ட கழக தலைவர் வீரமணி ராஜி, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வா.தமிழ்பிரபாகரன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாநில இளைஞரணி துணை செயலா ளர் மா. செல்லதுரை, மாவட்ட பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் பெருமுல்லையரசு, கழக காப்பாளர் வே. தனசேகரன், மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளர் டி. சிவாஜி, மாவட்ட துணை செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், திமுக பகுத்தறிவு கலை இலக்கிய தலைவர் பெ. அன்பழகன், பொதுக்குழு உறுப்பினரா அ.இளங்கோ, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.ஜீவிதா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் த.ராஜவேந்தன், தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் கதிர்செந்தில், தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் க. பொன்முடி, த.மு.யாழ் திலீபன், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் பி.கலைவாணன், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ், ஒன்றிய கழகப் பொறுப்பாளர் அழகிரி, மாவட்ட இளைஞரணி தலைவர் வினோத்குமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் சாய்குமார், ஒன்றிய செயலாளர் பொன்.அய்யனார், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
மா.பூங்குன்றன், நகர ப. க. தலைவர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் மு சிலம்பரசன், மொரப்பூர் ஒன்றிய மேனாள் திமுக செயலாளர் நாகராஜ், நகரத் தலைவர் மா.பூபேசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் கு.மணிமேகலை, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பெ. கல்பனா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ.உமா, ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
ஆதிதிராவிடர் நலக்குழு திமுக துணை செயலாளரும் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவருமான அரூர் சா.இராஜேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் செங்கல் மாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் என். சுபேதார் ஆகியோர் கருத்துரையாற்றினர். தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், நோக்க உரையாற்றினார், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மேனாள் அமைச்சருமான பி.பழனியப்பன் நிதி வழங்கி, ஆசிரியருக்கு சிறப்பு செய்து தொடக்க உரையாற்றினார்.
இறுதியாக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியார் உலகத்திற்கான ரூ.15 லட்சத்து 500 நிதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தென்றல் பிரியன், மலையனூர் ப. க. உதயசூரியன், பழ. சின்னதுரை, கடத்தூர் நகர தலைவர் புலவர் நெடு மிடல், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், சோலை துரைராஜ், தொழிலாளர் அணி பொறுப்பாளர் ஆ.சிலம்பரசன், தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் சின்னராஜ், தருமபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மா.சுதா, திமுக தலைமை கழக பேச்சாளர் ராசு. தமிழ்ச்செல்வன் விடுதலைவாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், அரங்கத் தமிழன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சஞ்சீவன், அரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிறீகுரு, பாப்பிரெட்டிப்பட்டி இளைஞரணி பொறுப்பாளர் ராஜேஷ், விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் கோ தனசேகரன், மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் அறிவுமணி, விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் பிரேம்குமார், செயலாளர் பாளையம் பசுபதி, மகளிர் பாசறை செயலாளர் சுடரொளி, அறிவொளி, கலா, சுசீலா, கலைவாணி, அன்புச்செல்வி, அறிவுமதி, புனிதவதி, வேளாங்கண்ணி, வேப்பிலைப்பட்டி அ. சத்ரபதி, தமிழரசன், கணேசன், அமுல்செல்வம், சி.நேதாஜி, மற்றும் தருமபுரி, சேலம், ஆத்தூர், திருப்பத்தூர், மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சாமியாபுரம் இணைப்புச் சாலையில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் வரை 3 கிலோமீட்டர் தொலை விற்கு கழகக் கொடி கட்டப்பட்டு பேனர்கள் வைக்கப்பட்டு மாநாடு போல் இருந்தது. இறுதியாக மாவட்ட கழக செயலாளர் கு.தங்கராஜ் நன்றி உரையாற்றினார்.