அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் 91 பேர் துடிதுடித்து மரணம்
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 91 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வீடுகள், தங்குமிடங்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ரோபோக்கள் இதில் பயன்படுத்தப்பட்டதாகவும், பெருமளவு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. போரை நிறுத்தக் கோரி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலேயே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.