மலேசிய திராவிடர் கழகம் சுங்கை பட்டாணி கம்போங் ராஜா கிளை சார்பில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா கிளைத் தலைவர்
வ. கதிரவன் தலைமையில் 17.9.2025 அன்று கொண்டாடப்பட்டது. பத்துடுவா பெரியார் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பினாங்கு மாநில மேனாள் தலைவர் ராமன் ,கெடா மாநில மேனாள் தலைவர் பாலன் ,சமூக சேவையாளர் சுப்ரா ஆகியோர் தந்தை பெரியார் அவர்களின் சமுதாயப் பணிகளையும் அவருடைய பரப்பரையால் மலேசிய தமிழர்கள் கல்வியிலும் அதன் மூலம் வேலை வாய்ப்பிலும் சிறந்தவர்களாக வளர்ச்சி பெற்றதற்கான சூழலையும் நன்றி உணர்ச்சியோடு எடுத்துக் கூறினர். தந்தை பெரியார் படம் சிறப்பாக கழகக் கொடிகளோடு அலங்கரித்து வைக்கப்பட்டது. கிளைச் செயலாளர் முருகேசன், நெறியாளராக நின்று கூட்டத்தை ஒழுங்கு செய்தார்.
மலேசியா- சுங்கை பட்டாணியில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா!

Leave a Comment