
கோவையில் தந்தை பெரியாரின் புதுப்பிக்கப்பட்ட சிலையினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கோவை கு. இராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ம. சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், தி.மு.க. மாணவர் கழக மாநிலச் செயலாளர் ராஜீவ் காந்தி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தளபதி முருகேசன், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. (கோவை, 14.9.2025)
