இந்நாள் – அந்நாள்

தமிழர் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை கொள்கைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு, அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association) ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award) வழங்கி மரியாதை செய்த நாள்  (22.09.2019) இன்று!

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் நகரில்  பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு  மேரிலாந்து பகுதியின் மாண் ட் கோமரி கல்லூரி வளாக பண்பாட்டு கலை மய்யத்தில் 2019 செப்டம்பர் 21, 22 தேதிகளில் நடந்தது.

அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பும் (Periyar International, USA) அமெரிக்க மனித நேயர் சங்கமும்  சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தினர்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மனிதநேயர் அமைப்பினர், பகுத்தறிவாளர்கள், அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்

அறிஞர்கள், சமூகப் போராளிகள், மற்றும் மனித நேயப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும்  விருது 1953-ஆம் ஆண்டு முதல் வழங் கப்பட்டு வரும் ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award)  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிக்கு 22.09.2019 அன்று வழங்கப்பட்டது.

விருதுக்கான காரணங்கள்:  ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த விருதைப் பெற முக்கியக் காரணமாக அமைந்தது, அவர் தந்தை பெரியாரின் கொள்கை வழியில் நின்று, பகுத்தறிவையும், சுயமரியாதையையும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக மேற்கொண்ட நீண்டகால சமூகப் பணிகள் மற்றும் அவரது உறுதியான செயல்பாடுகள்தான். குறிப்பாக, பின்வரும் பங்களிப்புகளுக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்:

  • சமூக நீதிப் பங்களிப்புகள்: சமூகத்தில் நிலவும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், அனைவரும் சமம் என்ற கொள்கையை நிலைநாட்டவும் இவர் ஆற்றிய அயராத பணிகள்.
  • பகுத்த றிவுப் பிரச்சாரம்: மூடநம்பிக் கைகள், சடங் குகள் ஆகிய வற்றுக்கு எதிராக அறிவியல் பூர்வமான சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
  • மனித நேயக் கொள் கைகள்: மனித நேயம், சமத் துவம், மற்றும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட அவரது எழுத்துகள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள், உலகெங்கிலும் உள்ள மனிதநேயச் சிந்தனையாளர்களை ஈர்த்துள்ளன.

திராவிடர் கழகத்தின் தலைவராக, கல்வி, மருத்துவம், ஊடகங்கள் எனப் பல துறைகளில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது நீண்ட காலப் போராட்ட வாழ்வும், சமூக சீர்திருத்தத் திற்கான பங்களிப்பிற்காக இப்பன்னாட்டு  விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் குமரேசன், உள்ளிட்ட திராவிடர் கழகப் பிரமுகர்கள் மற்றும் உலகங்கும் உள்ள மனித நேய பகுத்தறிவு மற்றும் சமூகநீதிக்காக குரல்கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *