பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வடிவமைப்புச் சிந்தனை மற்றும் மனித மய்யக்கல்வி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

2 Min Read

வல்லம், செப்.22- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சென்னையில் உள்ள வடிவமைப்பு சிந்தனை மற்றும் மனித மய்யக் கல்வி நிறுவனத்துடன் 18.9.2025 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கற்பித்தல், புதிய மாற்றம், ஆராய்ச்சி நிர்வாகம், சமுதாய வளர்ச்சிக்கான சிந்தனைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு மிகப் பெரிய முன்னேற்றப் பாதையாக அமையும்.

கற்பித்தலை மேம்படுத்தும்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி வல்லம் பெரியார் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்) நடைபெற்றது. நிகழ்ச்சியில் முனைவர் பாலமுருகன் (எ) அப்பாவு (இயக்குநர், நிதி உதவி பெற்ற ஆராய்ச்சி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம்)  வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.முனைவர் வெ.இராமச்சந்திரன் தலைமை உரையாற்றினார். அவர் தனது உரையில் இந்த ஒப்பந்தம் ஆசிரியர்களின் கற்பித்தலை மேம்படுத்தும் அவர்களின் பயிற்று முறைகளை மாற்றிட சிந்திக்கவைக்கும் , ஆய்வு அணுகுமுறைகளையும் மற்றும் பிரச்சினைகளை புதுமையாக தீர்க்கும் சிந்தனைச் செயல் முறைகளை வளர்க்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறினார்.

உயிரோட்டமுள்ள கற்றல்

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா உயிரோட்டமுள்ள கற்றல் கற்பித்தல் மாற்றம் கொண்டுவர இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  ஒப்பந்தம் வடிவமைப்பு சிந்தனை மனித மய்யக் கல்வி நிறுவன திட்ட மேலாளர் (கல்வி மேம்பாடு) ஆனந்த்பாபு புஷ்பராஜ் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)  பதிவாளர் பி.கே.சிறீவித்யா ஆகி
யோர் கையெழுத்திட் டனர். ஒப்பந்தத்தின் தொடக்க நிகழ்ச்சியாக மேலாளர் ஆனந்த் தங்களது கூட்டு திட்டங்களான அகாடமிக் நெக்ஸ்டெம் பற்றி விளக்கினார்.  செயல்திறன் மிக்க பேராசிரியர்கள் இந்த ஒப்பந்தத்தின் பயன்பாடுகளை வடிவமைப்பு சிந்தனை மேம்பாடு, நிறுவன மேம்பாடு திட்டமிடல் பாடத்திட்ட மறுசீரமைப்பு மாணவரை மய்யப்படுத்திய கல்வி, செயல் திறன்மிக்க எளிமையாக அனைவரும் மாணவரை மய்யப்படுத்திய கல்வி செயல்திறன் மிக்க எளிமையாக அனைவரும் பயன்படுத்தத் தக்க பல்கலைக்கழக இணையதள வடிவமைப்பு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)  தத்ெதடுத்துள்ள 67 புரா கிராமங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் வடிவமைப்பு சிந்தனையுடன் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைந்து ஆய்வுடன் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தல் நிகழ்ச்சியின் நிறைவாக அடிப்படைக் கல்வி துறை தலைவர் பேரா. முனைவர் எஸ்.புவனேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு முயற்சியால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்பிலும் சிந்தனை வடிவமைப்பிலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் முன்னோடியாகத் திகழும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *