புதுவை, செப்.22- கதிர்காமத்தில் சு.துளசிராமன்- கல்பனா ஆகியோரால் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ‘சிட்டிசன் பேட்மிட்டன் கிளப்பில்’ தந்தை பெரியார் 147 ஆம் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
முன்னதாக தந்தை பெரியார் படத்திற்கு பொதுக் குழு உறுப்பினர் விலாசினி ராசு, மாலை அணிவித்தார். அரியாங்குப்பம் கொம்யூன் திராவிடர் கழகத் தலைவர் செ.இளங்கோவன் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கல்பனா துளசிராமன், சுகுணா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். அனைவருக்கும் இனிப்பு, காரம் மற்றும் தேநீர் வழங்கிச் சிறப்பித்தனர். சிட்டிசன் இறகுப் பந்தாட்ட அமைப்பின் உரிமையாளர் சு.துளசிராமன் நன்றி கூறினார்.