செப்டம்பர் 28இல் மலேசியாவில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

மலேசிய மண்ணில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா, கழகத் தலைவர் நாக.பஞ்சு அவர்களின் தலைமையில், 28.9.2025ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 2.00 மணிக்கு, கோலாலம்பூர்; பிரிக்பீல்சு பாடாங் பெலியா சாலையில் அமைந்துள்ள ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவை, மேனாள் தலைமை ஆசிரியர், மதிப்புமிகு. மு.கெங்கம்மாள் மலையரசன் தொடங்கி வைத்து உரையாற்றுவார்.

திராவிடர் கழகத்தின் மதியுரைஞர், இரெ.சு.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.

‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளுக்கேற்ப வரலாறு காணாத சமுதாய சீர்திருத்த மருத்துவர் தந்தை பெரியார் அவர்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த நமது சமுதாயத்தின் அவல நிலைகளைக் கண்டுபிடித்து, அதன் மூலகாரணங்களை ஆய்ந்து ‘பேதங்களற்ற சமத்துவ சமுதாயம்’ அமைத்திட பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண் கல்வி, பொருளாதாரத்தில் சிக்கனம், மூடநம்பிக்கை ஒழிப்பு, எழுத்துச் சீர்திருத்தம் என பயனுள்ள பல சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தனது இறுதி மூச்சுவரைப் பாடுபட்டார். தந்தை பெரியார் அவர்களுக்கு விழா எடுப்பதில் மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் பெருமைக்கொள்கிறது.

கழகப் பொதுச்செயலாளர், அன்பரசன் சண்முகம் அவர்களின் வரவேற்புரையோடு தொடங்கும்

இவ்விழாவில், கல்லூரி மாணவர்களின் சொல்லரங்கம், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, அறிவுப்புதிர் போட்டி என பல அங்கங்கள் இடம்பெறவுள்ளன.

எனவே, இவ்விழாவிற்கு கழகத்தோழமை இயக்கங் களும் கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதனையும் அழைப்பாக ஏற்று விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொடர்புக்கு: 0129424301 / 0122679180 / 0123965793

– அன்பரசன் சண்முகம்,
பொதுச்செயலாளர், மலேசிய மா.தி.க.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *