டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
தி இந்து:
* ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதி” – ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கறார். மும்மொழி கற்பதில் என்ன பிரச்சனை? தமிழ்நாடு அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்க கூடாது என்றும் ஆணவப் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகியவை பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான தங்கள் முடிவுகளை அறிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 20 மாதங்களாக பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் கொள்கையை “வெட்கக்கேடானது மற்றும் தார்மீக கோழைத்தனமானது” என்று விமர்சனம்.
* மாணவர்களிடம் ஜாதி, பாலின பாரபட்சம் வேரூன்ற ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது: முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஜி.எஸ்.டி. குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி, மோசமடைந்து வரும் இந்திய-அமெரிக்க உறவுகள், எச்1பி. விசா வைத்திருப்பவர்களின் கவலைகள் அல்லது வரி தொடர்பான வாழ்வாதார அபாயங்களை நிவர்த்தி செய்வாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
– குடந்தை கருணா