காஞ்சிபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் வீ அன்புராஜ் பங்கேற்பு

4 Min Read

காஞ்சிபுரம், செப். 22- காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில், 17.9.2025 புதன்கிழமை காலை 8.00 மணியளவில், பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது.

தந்தை பெரியார் சிலைக்கு படிக் கட்டு அமைத்து புதுப்பிக்கப்பட்ட கட்டுமானத்தை காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணி யம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! என்ற வாழ்த்து ஒலி முழக்கங்கள் விண்ணதிர முழங்கப்பட்டன. முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

பொதுச்செயலாளர் உரை!

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தம் உரையில், காஞ்சிபுரத்தில் திராவிட இயக்க
முன்னோடிகளான அறிஞர் அண்ணா, சி.வி.எம். அண்ணாமலை, சி.பி. இராசமாணிக்கம், ஜானகிராமன், டி.ஏ. கோபாலன் முதலியோரின் தொண்டுகளைப் போற்றி, தந்தை பெரியார் சிலை வைக்கப் பாடுபட்டோரைப் பாராட்டி, கழகத் தலைவர் ஆசிரியரின் அனுமதி பெற்று புதிய படிக்கட்டு அமைத்துள்ள மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளி உள்ளிட்ட தோழர்களைப் பாராட்டினார். ‘பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்’ என்ற தமிழர் தலைவரின் கூற்றைக்குறிப்பிட்டு உலகத்தை பெரியார் மயம் ஆக்க அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றார். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் மேன்மேலும் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் முனைப்பு காட்ட வேண்டும். வரும் அக்டோபர் 4ஆம்நாள் செங்கற்பட்டை அடுத்த மறைமலை நகரில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. அதில் அனைவரும் நிர்வாகப் பங்கேற்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். பெரியார் உலகம் பணிகள் குறித்தும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

மாநாட்டு நிதி அளிப்பு!

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் சார்பில் காஞ்சி கதிரவன், அ.வெ. முரளி ஆகியோர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாநாட்டு நிதி வழங்கினர்.

சமத்துவநாள்
உறுதிமொழி ஏற்பு!

திராவிட மாடல் அரசால் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமத்துவநாளாக அறிவித்து ஆணை யிட்ட சமத்துவநாள் உறுதிமொழியை கழக சொற்பொழிவாளர் காஞ்சி கதிரவன் முழங்க அனைவரும் திரும்பக் கூறி உறுதியேற்றனர்.

காஞ்சி மாநகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் தோழர்கள் புடைசூழ வந்து மாலை அணிவித்தார். திமுக தலைமை கழகப் பேச்சாளர் நாத்திகம் நாகராசன் சமத்துவநாள் உறுதிமொழி கூற அனைவரும் திரும்பக் கூறி உறுதியேற்றனர்.

அஇதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, காஞ்சிபுரம் மாவட்ட அஇஅதிமுக செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கட்சித் தோழர்கள் புடைசூழ வந்து மாலை அணிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் மாநகர மாவட்ட செய லாளர் மதி ஆதவன் தலைமையில் தோழர்கள் வந்து மாலை அணிவித்து சமத்துவநாள் உறுதிமொழி கூறி உறுதியேற்றனர்.

மக்கள் மன்றத்தின் சார்பில் தோழர் மகேஷ், ஜெசி தலைமையில் ஏராளமான தோழர்கள் கொள்கை முழக்கத்துடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றிப்பெருக்கை வெளிப்படுத்தினர்.

மதிமுக கட்சியின் சார்பில் தோழர் ஏகாம்பரம் தோழர்களுடன் வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தோழர்கள் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் திரண்டு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முற்போக்கு சமூகநீதிப் பேரவை நிறுவனர் மருத்துவர் விமுனா மூர்த்தி தோழர்களுடன் வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். திருக்குறள் பேரவை சார்பில் குறள் அமிழ்தன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் காரை கு. அருளானந்தன் தோழர்களுடன் வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து வாழ்த்தொலி முழக்கமிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கழகக் காப்பாளர் ச. வேலாயுதம், மாவட்ட செயலாளர் கி. இளையவேள், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ. சின்னத்தம்பி, மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பிரபாகரன்,  மாவட்ட மகளிரணித் தோழர் ரேவதி, மாவட்ட இளைஞரணித் தலைவர் வீ. கோவிந்தராஜ், தோழர் பெரியார், தோழர் தவமணி, எழிலரசி, தோழர் காஞ்சி அமுதன், காரை கு. அருளா னந்தம், பாடகர் உலக ஒளி, மதிமுக பகுதி செயலாளர் செந்தில் மக்கள் மன்றம் வழக்குரைஞர் மேகலா, கருஞ்சட்டைத் தமிழர் பேரவை சாரதா தேவி, தோழர் பெ. பழனி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நன்றிப் பெருக்குடன் பங்கேற்றனர்.

பிற பகுதிகளில் தந்தை பெரியாருக்கு மரியாதை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அய்யன்பேட்டை, வாலாஜாபாத், அரும்புலியூர், சீத்தாவரம், களியப் பேட்டை, உத்திரமேரூர் முதலிய ஊர்களில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆ. மோகன், வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் செல்வம் முதலியோர் ஏற்பாடுகளைச் செய் திருந்தனர். திமுக, வி.சி.க, பொதுவு டைமை இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *