விழுப்புரம், நவ.10- விழுப்புரத்தில் அமைச்சர் க.பொன்முடி, செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியிருப்பதற்கு, அமைச் சர்கள் பி.கே. சேகர்பாபு, உதயநிதி ஆகி யோர் உரிய விளக்கமளித்துள்ளனர். அண்ணா மலை அய்.பி.எஸ். ஆன தற்கு காரணமே தந்தை பெரியார்தான்.
தமிழ்நாட்டில் இன்று அனைத் துத் தரப்பினரும் படிப்பதற்கும், சமம் என்ப தற்கும், பெரியார் போட்ட விதைதான் காரணம்.
சமூகப் பற்றுள்ள அனைவரும் பெரி யாரை ஏற்றுக் கொண்டுள் ளனர். உலகளவில் பகுத்தறிவு சிந்தனைக்கு காரணமானவர் பெரியார். அவரை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை. தமிழ் நாட்டில் பதவி கிடைக்கும் என நினைத்து அண்ணாமலை இப்படி ஏதேதோ பேசி வருகிறார். அண்ணாமலை தன்னை திருத்திக் கொள்ளவேண்டும்.
பட்டமளிப்பு விழாக்களில் உயர்கல்வித் துறை செயலாளர், அமைச்சர்யாரையும் பேச ஆளுநர் விடுவதில்லை. காரணம், அவர் மட்டுமே பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். இனி துணை வேந்தர்களிடம், நீங்களே விழாக்களை நடத்துங் கள் என, நாங்கள் சொல்லும் அளவிற்கு, ஆளுநர் நடந்து கொள்ள மாட் டார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.