சென்னை, செப்.21– யூனியன் வங்கி நல சங்கத்தின் சார்பில் சென்னையில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, சென்னை பிராட்வே யூனியன் வங்கி ஓபிசி நல சங்க அலுவலகத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி மாலை சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் வங்கியின் உயர் அதிகாரிகள்: யூனியன் வங்கி சென்னை மண்டல பொது மேலாளர் சத்யபான் பெகரா, துணைப் பொது மேலாளர்கள் ஆர்.தேவராஜ், சந்தோஷ் பிரபு குருபர், ஆர்.முத்துரத்தினம், உதவி பொது மேலாளர்கள் அனில் குமார், ராஜீவ் ரஞ்சன், எம்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, கேக் வெட்டி இனிப்புகளை பகிர்ந்து கொண்டதுடன், சமூக நீதி நாள் உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டது குறிப் பிடத்தக்கது.
விழாவில் நல சங்க நிர்வாகிகள்: சி. நடராசன், ஜி.சரஸ்வதி, பி.லோகேஷ் பிரபு, எம்.பாக்யராஜ்,எஸ்.சத்தியமூர்த்தி, வீ.கோபு, ஞா.மலர்க்கொடி, கே.சந்திரன், எஸ்.சேகரன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காலையில் யூனியன் வங்கி அலுவலகத்தில் அனைத்துப் பணி யாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.