வேலூர் மாவட்ட கழகப் காப்பாளர் குடியாத்தம் வி.சட கோபன் தனது 72-ஆம் பிறந்தநாள் மற்றும் வேலூர் மாவட்டக் கழக மகளிர் பாசறைத் தலைவர் ச.இரம்யா – கண் ணன் இணையரின் மகள், ஞிக்ஷீ.ஸி.ரி. அறிவுச்சுடர் 5 ஆண்டு மருத்துவப் படிப்பினை நிறைவு செய்ததை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பய னாடை அணிவித்து, வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தனர். உடன் வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.நடராசன், இலவச கல்விச் சட்டம் வழக்கில் திறம்பட வழக்காடியதை பாராட்டி, அவருக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (பெரியார் திடல், 26-05-2023)
(குறிப்பு: பணித் தோழர்கள் அனைவருக்கும் பயனாடைகள் வழங்கப்பட்டன.)