காரைக்கால், செப். 20- புதுச்சேரி லூகாஸ் – ராணி இணையர்களின் மகன் இலாரன்ஸ்சுக்கும், புதுச்சேரி வடமங்களத்தில் வசித்து வரும் வாசுதேவன் – வனஜா இணையர்களின் மகள் கீர்த்திகாவிற்கும், ஜாதி, மத மறுப்பு சுயமரி யாதை இணை யேற்பு விழாவை புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
சிபிஅய்(எம்) காரைக் கால் மாவட்ட செயலாளர் எஸ். எம். தமீம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பி.டி. முரளி, சிபிஅய் காரை மாவட்ட இளைஞரணி தோழர். பாலசுப்பிரமணியம், காரை மாவட்ட கழக செயலாளர் பொன்.பன்னீர் செல்வம் ஆகி யோர் முன்னிலையில், 13.9.2025 அன்று காலை 11 மணிக்கு காரைக்கால் சிபிஅய்(எம்) அலுவலகத்தில் நடை பெற்றது.
விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி வைத்த சுயமரியாதை திருமணத்தைப் பற்றி பேசி இணையர்கள் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.
சுயமரியாதை இணை யேற்பு உறுதி மொழியை புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி வாசிக்க அதனை இணையர்கள் வசித்து உறுதி மொழியை ஏற்று, மாலை மாற்றி, மோதிரம் அணிவித்துக் கொண்டனர். பின், இணையேற்பு உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் இட்டனர்.
பெண்ணின் அடிமை சின்னமான தாலி இந்த இணையேற்பில் தவிர்க்கப்பட்டு மிகவும் எளிமையாக நடைபெற்றது. இணையர்கள் இருவரும் வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள்.
இவ்விழாவில் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பி. பெரியார் கணபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆ. லூயிஸ் பியர், மாணவர் கழக மாவட்டத் துணைச் செயலாளர் சசிகுமார் மற்றும் மாணவர் கழகத் தோழர்கள் ரஞ்சித், தாமரைச்செல்வன் இந்திய தேசிய காங்கிரஸ் மாணவர் அணி செயலா ளர் ராஜீவ் காந்தி மற்றும் மணமகனின் பெற் றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக் கால் மாவட்ட மாணவர் கழக தலைவர் பிரவீன் பிர்லா நன்றி கூறினார்.