சென்னை கிண்டியில் ரூ.29 கோடியில் கலைஞர் நூற்றாண்டு கட்டடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

2 Min Read

சென்னை, செப்.20-  சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற் றாண்டு கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு கட்டடம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சென்னை-கன்னியாகுமரிதொழில் தடத் திட்டத்தின் நிதி கூறுகளின் கீழ், நெடுஞ்சாலைத் துறையின் திறன் மேம்பாட்டின் ஒருபகுதியாக சென்னை கிண்டியில், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டுகட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.9.2025) திறந்துவைத்து பார்வையிட்டார். இக்கட்டடம், 5,546 சதுர மீட்டர் பரப்பளவில், 3 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட் டுள்ளது.

தமிழ்நாடு மாநில நெடுஞ் சாலை ஆணைய அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் ஆகியவை இப்புதிய கட்டிடத்தில் இயங்கும்.

தமிழகத்தில் 6 வழிச்சாலைகள், அதிவேக விரைவுச் சாலைகள்உள்ளிட்ட பல்வேறு சாலை மெய்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல் வேறு முறைகளில் சாலைப் பணி களை செயல்படுத்தவும். தமிழக சாலை கட்டமைப்பை உலகத் தரத் தில் மேம்படுத்தும் நோக்குட னும், தமிழ்நாடு மாநில நெடுஞ் சாலை ஆணையம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த ஆணையத் தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் இலச்சினையையும் வெளியிட்டார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆய்வு

சென்னை, தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், 133ஆவது வார்டில் உங்களுடன் ஸ்டாலின்’ 2ஆவது முகாம் நேற்று நடைபெற்றது. அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் அளித்த மனுக்களின் விவரங்கள் குறித்தும், முகாமில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளும் குறித்தும் கேட்டறிந்தார். இந்த முகாமில், பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதையும், வங்கி கணக்கு தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதையும் முதலமைச்சர் பாராட்டினார். மேலும் முகாமில் மனுக்கள் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து வரும் பொதுமக்களின் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ். ரகுபதி, பெரியகருப்பன், ஆர். எஸ். ராஜகண்ணப்பன், மா.சுப்பிர மணியன், மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *