வல்லம், செப். 20- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கும்பகோணம், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கட்டுரைகள் வாசித்தளித்தல் போட்டியில் முதல் பரிசு உட்பட பல பரிசுகளை வென்றனர்.
02.09.2025 அன்று கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் தொழில்நுட்ப கட்டுரைகள் வாசித்தளித்தல் (Technical Paper Presentation) போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் (Cyber Security, Roboties) மற்றும் Internet of Things போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசித்தளித்தனர். தொழில் நுட்பக் கட்டுரைகள் வாசித்தளித்தல் போட்டியில் இக்கல்லூரியின் கணினியியல் துறை மாணவிகள் எஸ்..பஸ்ரினா சரின் மற்றும் எஸ்.பி.ஹர்சினி இரண்டாம் பரிசினை வென்றனர்.
மேலும் Non-Technical Connection என்ற போட்டியில் மாணவிகள் பி.பஸ்ரினா சரின் மற்றும் எல்.பிரியங்காசிறீ முதல் பரிசை வென்றனர். மேலும் அதே போட்டியில் மாணவர்கள் ஏ.குதுப் ஜாமீன் மற்றும் ஆர்.நவீன் குமார் இரண்டாம் பரிசை வென்றனர்.
அன்று நடைபெற்ற Cross Word போட்டியில் மாணவி பி.பஸ்ரினா சரின் முதல் பரிசையும் எல்.பிரியங்காசிறீ இரண்டாம் பரிசை வென்றனர்.
தொழில்நுட்பக் கட்டுரைகள் வாசித்தளித்தல் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற மாணவ, மாணவிகளை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர், முதன்மையர், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினர்.