கன்னியாகுமரி,செப். 20- குமரிமாவட்ட திராவிட மாணவர்கழகம் சார்பாக காலை 10-மணிக்கு கன்னியாகுமரி மலங்கரைபவன் கெஸ்டவுஸில் பெரியாரு டைய பிறந்தநாள் விழா எழுச்சிகரமாக தொடங்கியது.
யு.இவான்சலின் சாதனா வரவேற் புரையாற்றினார். மாநில தி.மா.க. துணைச் செயலாளர் தேவராசபாண்டியன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மு.தமிழ்ச் செல்வன், தொழிலாளரணி செயலாளர் க.யுவான்ஸ் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினர்.
மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் கருத்துரையாற்றினார். மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்கவுரையாற்றினார்.
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் திமுக செயலாளர் பா.பாபு, கன்னியா குமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீ பன்,அன்பழகன் திமுக இலக்கிய அணி அமைப்பாளர், காப்பாளர் ம.தயாளன், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் விளக்க வுரையாற்றினர்.
திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் ஆரூர்.தேவ.நர்மதா, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன் ஆகியோர் விரிவான சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜ சேகர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பெரியார் பெருந் தொண்டர்கள் சி.கிருஷ்ணேஷ்வரி, மு.பால்மணி, கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டாக்டர்கலைச்செல்வன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.குமார தாஸ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாசு. தோழர்கள் மோ.செ.பரத், சதீஸ், லைலா, பெரியார் பித்தன், த.வ.முகிலன், அபர்ணா, பிருந்தா, திமுக தோழர்கள் ஆட்லின்,டெல்பின் ஜேக்கப், சகாய ஆன்டனி மற்றும் ஏராளமான தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று தந்தை பெரியாருடைய புகழ் வாழ்க என கொள்கை முழக்கமிட்டனர். கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தோழர் இரா.முகிலன் நன்றி கூறினார். தந்தை பெரியாருடைய படம் விழாவில் திறக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.