திருச்சி, செப். 20- கல்வியின் பாதையில் மாணவர்களுக்கு ஒளியாக வும், வாழ்க்கையின் அனைத்து தருணங் களிலும் வழிகாட்டியாகவும் விளங்கும் ஆசிரியர்களை நினைவுகூறும் வகையில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 04.09.2025 அன்று ஆசிரியர் தின விழா மிகச் சிறப் பாகக் கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் அன்பும், பாசமும் நிறைந்த இந்த நாள், ஆசிரியர்களின் அருமையையும், பெருமையையும் கொண்டாடும் மறக்க முடியாத தருண மாக அமைந்தது.
பள்ளி முதல்வர் முனைவர்.க.வனிதா தலைமையில், மொழி வாழ்த்துடன் நிகழ்வு தொடங்க, மாணவத் துணைத் தலைவர்.செல்வன் எக்ஸ். ஆல்வின் ஜெரோன் அனைவரையும் அன்போடு வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து, ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடல்கள் பாடி, நடன நிகழ்வுகளை வழங்கி, ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளை வெளிப்படுத்தினர். அவர்களின் ஆற்றல், கலை, பாசம் ஆகியவை அனைவரின் மனதையும் வருடியது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் இ.மணீஷ், ஆசிரியர் தின சிறப்புரையில் கல்வியின் முக்கியத்துவத்தையும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கும் வழிகாட்டுதலின் அருமையையும் எடுத்து ரைத்தார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சீ.விக்னேஸ்வரன் வழங்கிய கீபோர்டு இசை நிகழ்ச்சி, விழாவின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்தது. பத்தாம் வகுப்பு மாணவி தருணிக்கா ஜாஸ்மின், ஆசிரியர்களுக்காக எழுதிய கவிதையை உணர்வுப் பூர்வமாக வாசித்து, அனைவரின் பாராட்டைப் பெற்றார்.
பள்ளியின் இளங்கலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள், கல்விப் பயணத் தில் தாங்கள் எதிர்கொண்ட சவால்கள், மாணவர்களை உருவாக்க எடுக்கும் முயற்சிகள், எதிர்காலக் கனவுகள் ஆகிய வற்றைப் பகிர்ந்து, மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். அவர்களின் அனுபவங்கள், வாழ்க்கைப் பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, கல்வி என்பது வெறும் பாட புத்தக அறிவாக மட்டும் அல்லாமல், நல்லொழுக்கம், பொறுப்பு, அன்பு ஆகியவற்றோடு இணைந்த ஒரு வாழ்வியல் பயணம் என்பதை உணர்த்தினர்.
நிகழ்வின் இறுதியில், பள்ளி மாணவத் தலைவர் அய்.கைஃப் அகமது நன்றியுரையாற்ற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
நிகழ்வில் மழலையர் பிரிவு மாணவர்கள் முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.